கள்ளமவுனம்

நிச்சயம் அவன் இந்த தேசத்து மாபெரும் சுதந்திர வீரன், அவனைபோல் ஒருவனை இத்தேசம் கண்டதுமில்லை காணபோவதுமில்லை

அவனது மைசூர் சமஸ்தானம் இன்றைய ஜெர்மனுக்கு ஈடான பொருளாதாரத்தை கொண்டிருந்தது அதை குறிவைத்தே வெள்ளையன் போர் நடத்தினான்

புகழ்பெற்ற தன் முதல் இரு போர்களில் ஆங்கிலபடைகளை கதறவைத்திருந்தான் அவன், பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் வலிய சொன்னான் “என்னை போல் ஒருவனை வரலாற்றில் திப்பு வடிவில் காண்கின்றேன்” , திப்புவுக்கு படை அனுப்ப நெப்போலியன் முடிவும் செய்திருந்தான்

அந்த பாழாய்போன நெல்சன் என்பவன் இல்லாமலிருந்தால் நெப்போலியன் உதவி திப்புவுக்கு கிடைத்திருக்கும், நாட்டின் தலைவிதிமாறியிருக்கும்

திப்புவின் ராக்கெட்டை பார்த்து நெப்போலியனுக்கே ஆச்சரியமான காலங்கள் உண்டு, ஆம் வரலாற்றில் முதன் முதலில் ராக்கெட்டை பயன்படுத்தியவன் அவனே

அதன் மாதிரி ஹிட்லரிடம் இருந்தது, இன்று பெண்டகனில் உண்டு

நெப்போலியன் வலிமைபெறுவதற்குள் திப்புவினை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த பிரிவினையில் இறங்கினான் வெள்ளையன்

ஆம் இந்து முஸ்லீம் வேற்றுமையினை விதைத்தான், மற்ற இந்து மன்னர்கள் உதவி இல்லா நிலையில் திப்பு தனித்துவிடபட்டான்

இவ்வளவுக்கும் ஆதீனங்களுக்கும் மடங்களுக்கும் திப்பு அள்ளிகொடுத்தது கொஞ்சமல்ல, அந்த ஸ்ரீரங்கப்பட்டணம் ஆலயத்தில் அவன் நன்கொடை நகைகள் இன்றும் உண்டு

அந்த மாவீரனின் மெய்காப்பாளர்களை கொண்டே துரோகத்தால் அவனை சாய்த்தான் வெள்ளையன்

திப்பு களத்தில் இறந்து கிடக்கும் பொழுது அவனுக்கு மாவீரனுக்குரிய அஞ்சலி செலுத்தி பெருமூச்சுடன் சொன்னான் வெள்ளை தளபதி “இனி இந்தியா நமது”

அத்தோடு இன்னொன்று சொன்னான் “இந்து முஸ்லீம் பிரிவினை ஒன்றே இந்தியாவினை ஆள சரியான வழி”

இத்தேசம் இன்றுவரை பற்றி எரிவது அதில்தான்

மத இனம் மொழி கடந்து மாபெரும் இந்திய அடையாளமாய் வீற்றிருப்பவன் திப்பு சுல்தான்

அவனது பொருட்கள் சில லண்டனில் ஏலத்திற்கு வருகின்றன எல்லாம் சேர்ந்து 150 கோடிவரை செல்லலாம்

மைசூர் அரண்மனையில் கைபற்றபட்ட திப்புவின் இன்னொரு வாள், துப்பாக்கி, அவனின் காலடியில் இருந்த சிம்ம அடையாளம் என பல‌

உலகை ஆண்ட வெள்ளையன் பல விஷயங்களை இப்படி கொண்டு சென்றான், பல நாடுகள் நெருக்கடி கொடுக்க சில திருப்பி கொடுக்க்கபட்டன‌

அப்படி எத்தியோப்பிய மன்னனின் அடையாளமான தங்க கீரிடம் திருப்பி கொடுக்கபட்டது

அது விக்டோரியா காலத்தில் வந்ததால் கொடுக்கபட்டது ஆனால் திப்புவின் பொருட்கள் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் கைபற்றபட்டதால் அதை ஏலத்தில்தான் எடுக்க வேண்டுமாம்

இதில்தான் விஜய் மல்லையா நினைவுக்கு வருகின்றார்

திப்புவின் இன்னொரு வாள் பிரசித்திபெற்றது, இலகுவான ஆனால் கவசங்களையும் ஊடுருவும் உறுதியான உலோகம் அது, அதை கண்டு வியந்த வெள்ளையன் அதை பத்திரபடுத்தினான்

அது சிலவருடங்களுக்கு முன்பு ஏலத்திற்கு வந்தபொழுது அதை வாங்கி மைசூருக்கு கொண்டுவந்தார் மல்லையா

நல்லவரோ கெட்டவரோ அவரின் அந்த பணி வாழ்த்துகுரியது

ஆனால் இப்போது அவருக்கும் சிக்கல் இல்லாவிட்டால் மல்லையா விடமாட்டார்

இந்த அரசு ஏறெடுத்தும் பார்க்குமா? நிச்சயம் இல்லை, திப்பு பிறந்தநாளே கூடாது எனும் கொள்கையுடைய அரசு இது

கவனியுங்கள் பட்டேலுக்கு பல்லாயிரம் கோடியில் சிலை, சிவாஜிக்கு சில ஆயிரம் கோடியில் சிலை ஆனால் மைசூர் சிங்கத்தின் விஷயத்தில் அமைதி என்றால் யாருக்கு கோபம் வராது

நல்ல இந்தியனுக்கு வரும், எமக்கு வருகின்றது

இவ்வளவுக்கும் சிவாஜியின் வீரத்திற்கு கொஞ்சமும் குறைந்தவனல்ல திப்பு

அந்த மைசூர் சிங்கத்தின் பொருட்களை மீட்பதில் கள்ளமவுனம் காக்கும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்து அரசர்கள் என்றால் பொங்குவதும் இஸ்லாமிய சிங்கம் என்றால் பம்முவதும் நல்ல அரசுக்கு அழகல்ல‌

இந்த நாட்டில் இந்த மதசார்புள்ள அரசால் பல விஷயங்களை இழக்கின்றோம் இதில் திப்புவின் அடையாளமும் ஒன்று

ஒரு விதத்தில் மனம் வலிகின்றது

வெறும் 200 கோடி இருந்தால் அந்த மாவீரனின் அடையாளங்களை மீட்டுவிடலாம், ஆம் எங்கள் நாட்டு சிங்கம் பயன்படுத்திய தங்க பொருள் என கொண்டாடலாம்

செய்வதற்குத்தான் யாருக்கும் மனமில்லை

ஒரு தொகுதியில் தேர்தலுக்கு 200 கோடிவரை செலவு செய்கின்றார்களாம், அப்படியானால் தமிழக செலவு இந்திய செலவுகளை கவனியுங்கள்

திப்புவின் பொருட்கள் என்ன? லண்டனையே வாங்கலாம்

செய்யவேண்டிய காரியம் ஏராளம் இருக்க இங்கு தேர்தல் ஆரவாரத்தில் நிறைய இழக்கின்றோம்

திப்புவின் பொருட்களை மீட்க தவறிய இந்த அரசு ஒழியட்டும், சரியட்டும்

நல்ல இந்தியன் இவர்கள் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டான்

ஏன் இவர்கள் கள்ளமவுனம் காக்கின்றார்கள் என்றால் திப்புவினை கொண்டாடினால் இந்து முஸ்லீம் ஒற்றுமை வரும், அந்த ஒற்றுமை இவர்களுக்கு மகா ஆபத்து

அதனால்தான் அரசியலுக்காக அந்த மாவீரனை புறந்தள்ளுகின்றார்கள் அயோக்கியர்கள்

இவர்கள் இப்படி கள்ளமவுனம் காப்பதால் அந்த மாவீரனின் புகழை மறைக்கமுடியாது

நெப்போலியனின் வரலாறு, கிழக்கிந்திய கம்பெனி வரலாறு , அது நடத்திய யுத்த வரலாறு அதில் திப்பு கொடுத்த அதிர்ச்சி போர், ராக்கெட் வரலாறு என எல்லாவற்றிலும் அவன் வாழ்ந்து கொண்டே இருப்பான்

அந்த மாவீரனின் புகழை இவர்களின் கள்ளமவுனம் ஒருநாளும் சரிக்காது, இவர்கள்தான் சரிந்து போவார்கள்