கவலைபடாம போங்கோ

“சொல்லுங்கோ அவா பேருக்குத்தானே அர்ச்சனை ஷேமமா பண்ணிரலாம்

அதில்லிங்க சாமி, நானே ஒத்தபுள்ளைய கருவேப்பிலை நாற்றுமாதிரி வச்சிருக்கேன், அவரு இல்லாத நேரம் சொத்துல பங்கு இல்லண்ணு விரட்டிவிட்டிருவாங்களோன்னு பயமா இருக்கு..

அதான் வீடெல்லாம் கட்டி சொத்தெல்லாம் பிரிச்சிட்டு போயிட்டாளே பெரியவா?

சொத்துன்னா வீடு மட்டுமில்ல சாமி கட்சியும்தான் ,மூத்தவங்க பேரன் கைக்கு போயிரும் போல, எனக்கும் ஒரு பேரன் இருக்கான் சாமி, அவனுக்கும் பங்கு இருக்கா இல்லியா? தெய்வம்தான் கேட்கணும்..

அதெல்லாம் வருத்தபடாதீங்கோ, ஒரு காலத்துல இந்திரா மாமி உங்க கம்பெனிக்குள்ள ஆடுனாளோன்னோ அப்படி இனி உங்க கட்சிக்குள்ள ஆட சிலர் வருவா, பெருசா ஹோமம் எல்லாம் வளப்பா. கவலைபடாம போங்கோ, சொத்துல எப்படியும் சரிபாதி வந்திரும்..”