காக்கையினை நம் முன்னோர்கள் என சொல்கின்றது இந்துமதம்.

Image may contain: bird and outdoor

இப்பொழுதெல்லாம் காலையிலே வாசலுக்கு வந்துவிடுகின்றது காகங்கள், இரு வாரங்களில் அதுவும் நமக்கு நட்பாகிவிட்டது

நானும் அதுவும் ஒரே நிறம் என்பதும் காரணமாக இருக்கலாம்..

காகம் மானிட வாழ்வில் அக்காலம் தொட்டே வரும் பறவை, சாணக்கியன் வள்ளுவன் என எல்லா மேதைகளும் கவனித்த பறவை அது

சாணக்கியன் சொல்வான்

“பறவைகளில் தந்திர சாலி காகம்
மிருகக்ங்களில் தந்திர சாலி நரி
பெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி (இதை வேலைக்காரி என்றும் சொல்லலாம்)”

அது தந்திரசாலி மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. பறவைகளில் அதற்குள்ள அறிவுக்கு ஈடாக இன்னொரு பறவையினை சொல்லுதல் கடினம்.

கூடுதலாக சாணக்கியன் சொன்னான்


பெண்கள் செய்யாதது ஏதேனும் உண்டா?
குடிகாரர்கள் உள றாதது ஏதேனும் உண்டா?
காகங்கள் சாப்பிடாதது ஏதேனும் உண்டா?”

ஆம் காகம் அனைத்துண்ணி, அது இருக்கும் இடத்தில் எந்த அசுத்தமும் பரவாது சோறு மிஞ்ஞ்சினாலும் உண்ணும், விலங்கு செத்தாலும் உண்ணும், நோய் பரவ விடாது

காகத்தை தன் வீட்டில் ஒருவராக கொண்டாடியது இந்துமதம், கூடுதலாக அது சனியின் வாகனம் என்றே உயர்த்தி சொன்னது

சனிக்கும் காகத்துக்கும் என்ன சம்பந்தமென்றால் காக்கையால் சனிகிரகத்துக்கு ஆக போவது ஒன்றுமில்லை மாறாக காக்கை உணவிடுதல் மகா புண்ணியமென்பதாலும் அதை தவிர்க்கவே கூடாது என்பதற்காகவும் சனியின் வாகனமாக்கினார்கள்

சனிக்கு அஞ்சாத மனிதர் இல்லை என்பதால் மிக தெளிவாக அந்த உருவம் கொடுத்தார்கள், பறவைகளில் அது தனி அறிவோடு திகழ்வதால் இது மானிட அறிவின் சாயல் என்பதால் முன்னோர்கள் என்றார்கள்

அறிவியலில் ஒரு கேள்வி உண்டு குரங்கில் இருந்து மனிதன் வந்திராவிட்டால் எந்த உயிரில் இருந்து வந்திருப்பான் என்பது அது? குரங்கு இல்லாவிட்டால் இன்னொரு உயிரினம் மனிதனாக பரிணமித்திருக்கும் அது பறவையாக கூட இருக்கலாம் என்றது அதற்கான பதில்

முன்னோர்கள் அந்த காகத்தை அப்படிபட்ட பறவையாக நோக்கியிருக்கலாம்

வள்ளுவனுக்கு காகத்தை மிகவும் பிடித்திருந்தது, தன் குறளில் அதற்கும் இடம் கொடுத்திருந்தான்

“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள”

இந்த பகல்வெல்லும் கூகையினையினை என்பது கவனிக்கதக்கது, ஆந்தை இரவில் காகத்தின் குஞ்சுகளை கண்ட அஸ்வத்தாமன், அந்த இரவிலே இளம் பஞ்ச பாண்டவரை கொன்றானாம்

ஆம் இரவில் காகம் ஒளியும் திணறும் ஆனால் பகலில் ஆந்தை கிடைத்தால் குதறிவிடும்

இன்னும் ஏகபட்ட புலவர்கள் பாடினர்.. ஒரு தமிழ்புலவன் இப்படி பாடினான்

“காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல் – சால
உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்..”

அதாவாது காகத்திடம் இருந்து உலகம் கற்க வேண்டிய பாடம் இவை என்கின்றான்

காலை எழுந்திரு, பிறர் காணாமல் புணர் (மறைவாக தாம்பத்தியம்), மாலையிலும் குளி, .பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண்.

ஆம் இது மனிதனுக்கு இருக்க வேண்டிய குணம் அல்லவா? இதனால்தான் காக்கையினை நம் முன்னோர்கள் என சொல்கின்றது இந்துமதம்