காங்கிரஸ்காரர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல
காங்கிரஸ்காரர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல
இந்திராவே அலகாபாத் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டவர்
வழக்குகள் வந்தால் எதிர்கொள்வதும், வாதாடியோ இல்லை நேரம் பார்த்தோ வெளிவருவதும் அவர்கள் ஸ்டைல்
அரசியலில் வழக்கு இல்லாதோர் மிக குறைவு, ஆனால் அதை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்
அதைவிடுத்து சிதம்பரம் இப்படி எல்லாம் இழுத்தடிப்பது அவருக்குத்தான் இழுக்கினை தேடிதரும்
அந்த ஜெயாவினை எடுத்துகொள்ளுங்கள், நீதிசட்டத்தில் எவ்வளவு சந்து பொந்து உண்டோ அங்கெல்லாம் நுழைந்து இழுத்தடித்தார், காற்றுபுக முடியாத இடைவெளியில் எல்லாம் நுழைந்து தண்ணீர் காட்டினார்
கடைசிவரை அவர்மேல் பெரும்தண்டனை இல்லை குற்றம் சாட்டபட்டவர் என்ற நிலையிலே போய் சேர்ந்துவிட்டார்
கலைஞர், கேட்கவே வெண்டாம்
நீதிபதி சர்க்காரியாவே தாடியினை பிய்த்துவிட்டு ஓடிவிட்டார், விஞ்ஞான ஊழல் என அவர் சொன்னாலும் விஞ்ஞானத்துக்கு அடிப்படையே ஆதாரம் என கலைஞர் பதிலுக்கு கலாய்க்கவும் சர்காரியா அதன் பின் தென்னிந்தியாவுக்கே வரவில்லை
அதன் பின்னும் எத்தனை வழக்குகள் வம்புகள்?
நள்ளிரவில் தன்னை கைது செய்ய வந்தவர்களிடம் கூட ஓடிஓளியாமல் அய்யய்யோ கொலைபண்றாங்க என அனுதாபம் தேடிய அரசியல்வாதி அவர்
அந்த அனுதாபம் அவரை ஆட்சிக்கும் அழைத்து சென்றது, பிறவி அரசியலவாதி என்றால் அதுதான்
தயாளு அம்மாளை எப்படி எல்லாம் ஸ்பெக்ட்ரமில் இருந்து காத்தார், கடைசி வரை நீதிமன்றபடி மிதிக்கவிடவில்லை. மருத்துவ அறிக்கை, தயாளு டாக்டரை கடித்த்து பிராண்டிவிடும் என்ற மிரட்டல் இன்னும் ஏக வித்தைகளில் தயாளுவினை மீட்டு வந்தார்
என்னதான் ஊழல் என பாடினாலும் கடைசி வரை கலைஞர் மேல் ஒரு துரும்பு ஊழலும் யாராலும் நிரூபிக்க முடியவில்லை
200 கோடி ரூபாயினை பெற்று கலைஞர் டிவி திறந்து சில மாதங்களிலே அதை வட்டியுடன் கட்டிவிட்டேன் என ஆதாரத்தை நிரூபித்தவர் அவர்
அப்படியெல்லாம் வித்தகர்கள் இருந்த தமிழகத்தில் ப.சி என்றொருவர் இருந்ததும் அவர் இப்படி ஓடி ஒளிவதும் தமிழக அவமானம்
ஜெயாவுக்கு ஏன் ப.சியினை பிடிக்காது என்பதும் கலைஞர் ஏன் அவரை ஒரு மாதிரியாக ஒதுக்கி வைத்திருந்தார் என்பதும் இப்பொழுதுதான் தெரிகின்றது