காங்கிரஸ் அல்லாத இந்தியா, காந்தியின் கனவை நனவாக்குவோம் : : மோடி
காங்கிரஸ் அல்லாத இந்தியா, காந்தியின் கனவை நனவாக்குவோம் : : மோடி
தனக்கு பொய்யினை தவிர வேறு எதுவும் பேசவராது என்பதை நிரூபிப்பதில் மோடிக்கு அப்படி ஒரு ஆர்வம்
காந்தி என்ன சொன்னார்? சேவாதள் போன்ற அமைப்புகள் சுயநலத்தில் ஈடுபடுவதால் சுதந்திரத்திற்கு பின் காங்கிரசில் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றார்,
காங்கிரசை மாற்றி வலுவாக்கிவிடுவாரோ என அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சுட்டு கொன்றது இந்து வெறி கோஷ்டி.
காந்தி இந்து தலைவராக இருந்தால் ஏன் சுடுகின்றார்கள்? அவர் இந்திய தலைவராக இருந்ததுதான் சிக்கல்
காந்தியின் கனவினை நிறைவேற்றுவதாக இருந்தால் மோடியும் பாஜகவும் செய்ய வேண்டியது மதவாதத்தை கைவிடுவது, அதனை செய்வார்களா?
நிச்சயம் மாட்டார்கள். மதவாதமற்ற இந்தியா என்பதை விட காந்திக்கு என்ன கனவு இருந்தது?
அதென்ன காந்தி மீது மோடிக்கு திடீர் கரிசனம்?
மாட்டுபால் போல ஆட்டுபாலையும் பிரபலபடுத்த போகின்றார்களோ? ஆக ஆட்டுக்கும் ஆதார்கார்டு முதல் ஆட்டுகறிக்கும் தடை வரும் வரலாம் போல
ஆக இந்தியர்களே எதற்கும் நள்ளிரவில் தயாராய் இருங்கள்