காங்கிரஸ் ஒரு குடும்பத்தை வழிபடுகிறது: பிரதமர் மோடி

“அரே பழ்னிச்ச்சாமி ஜி, நம்பிள் தோஸ்த் எஸ்.வீ சேகர்ஜி நல்ல்லா இருக்கா?.
ராக்கெட் ராஜாஜி மாத்ரி நிம்பிள் அவரே அரஸ்ட் பண்ணே, நம்பிள் டென்சன் ஆய்ருவான் ஜாக்கிர்தை ஜி”
பாஜக தன்னை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறது; காங்கிரஸ் ஒரு குடும்பத்தை வழிபடுகிறது: பிரதமர் மோடி
அந்த குடும்பம் அன்று தேசத்திற்கு அள்ளி கொடுத்தது, நேரு பல்லாண்டு சிறையில் இருந்தார்
இந்திராவும் ராஜிவும் தன் உயிரையே தேசத்திற்கு கொடுத்தார்கள்
எத்தனையோ சோதனைகளை சந்தித்த சோனியா இந்நாட்டு மகளாகவே இங்கு சேவையாற்றி கொண்டிருக்கின்றார்
ராகுல் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இந்நாட்டிற்கு உழைத்துகொண்டிருகின்றார்
காங்கிரஸுக்கும் இந்நாட்டுக்கும் அக்குடும்பம் செய்திருக்கும் தியாகங்கள் ஏராளம், காங்கிரஸ் அதற்கு கட்டுபடுகின்றது
எங்கே? பாஜகவில் அப்படி ஒரு அர்பணிப்பு மிக்க குடும்பத்தை காட்டுங்கள் பார்க்கலாம்?
நாட்டுக்கு காங்கிரசும் பாஜகவும் என்ன செய்தது என்பதைத்தான் பேச வேண்டுமே தவிர, சம்பந்தமில்லாமல் குடும்ப அரசியல் என பேசுவது சரியல்ல
இதெல்லாம் அதிமுக பாணி
இந்த அதிமுக அரசுடன் பழகி பாஜகவிற்கும் அந்த பரிதாபம் ஒட்டிகொண்டது, பழக்க தோஷம் என்பது இதுதான்