காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது பார்த்தீர்களா?

Image may contain: aeroplane

1989ல் சோவியத் யூனியன் உடைந்து சிதறியது, குழப்பமான கொள்கைகளால் உற்பத்தியும் பணமும் இன்றி வீண் ஈகோவில் இருந்த அந்த வல்லரசு மொத்தமாக சிதறியது

அந்நேரம் மிக மிக வறுமையில் இருந்தது ரஷ்யா, எல்லாம் கைமீறி போயிருந்தது, உக்ரைனின் செர்னோபில் அணுவுலை விபத்தால் கோதுமை வயல்களும் கைவிடபட்டு உனவுமில்லாமல் இருந்தது

1950ல் இருந்து சோவியத்துடம் மாபெரும் யுத்தம் புரிந்த அமெரிக்கா, பெரும் விபரீத யுத்த முனைகள் எல்லை வரை சென்ற அமெரிக்கா, சோவியத்தை ஒழிக்க கொரியா, வியட்நாம் இன்னும் எங்கெல்லாமோ போர்களங்களை திறந்த அமெரிக்கா, சுருக்கமாக சொன்னால் தன் வரலாற்றில் 70 வருடத்தினை சோவியத்தை ஒழிப்பதிலே செலவழித்த அமெரிக்கா அதில் உற்சாகமானது

ஹிட்லரையும் ஜப்பானையும் வளர்த்து அவர்கள் உடைக்க நினைத்த சோவியத் உடைந்து கிடந்தபொழுது சாக கிடக்கும் காட்டெருமை பக்கம் வந்து அமரும் கழுகாக அமர்ந்தது

ஆம் கப்பல் நிறைய கோதுமைகளை அனுப்பி ரஷ்யாவுக்கு கொடுத்து சொன்னது “இந்த உதவியினை ரஷ்ய மக்கள் மறக்கமாட்டார்கள், அமெரிக்கா எப்பொழுதும் உலக மக்களின் நலன் விரும்பி அது ரஷ்யர்களையும் நேசிக்கின்றது”

மானமுள்ள ஒவ்வொரு ரஷ்யனும் அழுதான், ராணுவத்தினர் அழுதனர், அன்றைய ரஷ்ய உளவுதுறையின் சாதாரண ஊழியரான புட்டீனும் அழுதார்

இன்று காட்சிகள் மாறிவிட்டன, புட்டீன் ரஷ்யாவினை ஓரளவு பலமாக்கிவிட்டார், ஜனவரியிலே எல்லைகளை மூடியதில் ரஷ்யா ஓரளவு கொரோனாவில் இருந்து விடுவிக்கபட்ட நாடு

இப்பொழுது கொரோனாவில் பெரும் பாதிப்புக்குள்ளான அமெரிக்கா உலகெல்லாம் மருந்துக்கும் மருத்துவ பொருக்கும் கையேந்தும் காலம், கொரோனாவின் கோரம் அப்படி அவர்களே எதிர்பாரா அடி இது

இந்நிலையில் ரஷ்ய விமானங்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் ரஷ்ய விமானம் அமெரிக்காவுக்கு சென்றாயிற்று, ஏகபட்ட மருந்துகள் மருத்துவ பொருட்களுடன் அங்கு இறங்கிவிட்டது, இன்னும் நிறைய வருமாம்

அன்று அமெரிக்கா சொன்ன அதே வார்த்தையினை புட்டீன் இப்பொழுது சொல்கின்றார்

“இந்த உதவியினை அமெரிக்க‌ மக்கள் மறக்கமாட்டார்கள், ரஷ்யா எப்பொழுதும் உலக மக்களின் நலன் விரும்பி அது அமெரிக்கர்களையும் நேசிக்கின்றது. “

இதை பார்த்ததும் ஒவ்வொரு அமெரிக்கனும் அழுகின்றான், வாயில் டை வைத்து வெள்ளை மாளிகையில் கதறி அழுகின்றார் டிரம்ப்…

காலம் எப்படி எல்லாம் ஆடுகின்றது பார்த்தீர்களா? உலக சக்கரம் அப்படித்தான்.