காலம் மாறியும் ப.சி நிலைப்பார்
என்ன இருந்தாலும் ப.சிதம்பரம் தனி வரலாறு கொண்டவர், தனிபெரும் குடும்பத்தின் பெரும் வாரிசு, பெரும் பாரம்பரியமும் கல்வியும் கொண்டவர்
ஒரு அரசனுக்கு நிகராக கொண்டாடபட்ட வம்சம் அவர்
காமராஜரின் சீடர், மிக சிறிய வயதிலே அரசியலுக்கு வந்தவர் இன்றுவரை மதிக்கபடும் பண்பாளர்.
காமராஜர், இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என பல தலைமுறை காங்கிரசாரோடு இணைந்து வரும் தலைவர் அவர், அனுபவமும் அறிவும் அதிகம்
இந்தியா முழுக்க காங்கிரஸின் முகமாக அறியபடும் தமிழர், இந்த மோடி எழுச்சி ஏற்பட்டிருக்கவில்லை என்றால் காங்கிரஸின் பிரதமராக அவர் வந்திருக்க கூடும்
மன்மோகன் சிங்குக்கு அடுத்த இடம் காங்கிரஸில் அவரே
நிதி அமைச்சராக அவர் உலகெல்லாம் அறியபட்ட காலம் உண்டு, இந்தியாவின் மிகசிறந்த பட்ஜெட் என சொல்லபடும் பட்ஜெட்டெல்லாம் அவரின் பட்ஜெட்டே
அச்சாதனையினை உடைப்பார் எவருமிலர்,தனிபெரும் அறிவாளி அவர்
ஈழபிரச்சினையின் தொடக்கத்தில் பிரபகரனை தன் பாதுகாப்பில் வைத்திருந்தவரும் அவரே, கடைசி நாளில் அவனை சரணடையும்படி சொல்லி ஒப்பந்தம் தயாரித்தவரும் அவரே
இன்னும் ஏகபட்ட விஷயங்களை அவர் இங்கு செய்யத்தான் பார்த்தார்
திமுக கூட்டணியில் தமிழகம் பெற்றுகொண்ட அனைத்து நன்மைகளில் சிதம்பரத்தின் உழைப்பும் இருந்தது மறுக்க முடியாது
முன்பொரு காலத்தில் ராஜிவ் ஜெயா கூட்டணி உருவாக பாடுபட்டவரும் அவரே, ஜெயாவுக்கு தனிபெரும் அரசியல் அடையாளம் உருவாக வழிவகுத்தவரும் அவரே
பின்னாளில் அதே ஜெயலலிதாவினை தனி காங்கிரஸ்காரனாக எதிர்த்தவரும் அவரே
நிச்சயம் சிதம்பரம் கழுகு என்றால் பழனிச்சாமி சிட்டுகுருவி
சிதம்பரம் புலி என்றால் பழனிச்சாமி எலி
ஆனால் யானை தடம்மாறி சென்றது போல மகனால் சில சிக்கல்களில் சிக்கிவிட்டா ப.சி
புத்திரபாசம் கலைஞரை கவிழ்த்தது போல ப.சிதம்பரத்தையும் சில இடங்களில் புரட்டிபோட்டுவிட்டது
வேட்டிகட்டி தமிழனுக்கு டெல்லியில் தனி இடமும் மரியாதையும் பெற்றுதந்த, ஏன் டெல்லி தாண்டியும் பெற்றுதந்த அந்த பெருமகனை பழனிச்சாமி சீண்டுவெதெல்லாம் கால கோலம்
முன்பே சொன்னபடி ப.சி ஒரு கழுகு , இந்த பழனிச்சாமி ஒரு பாம்பு ஆனால் அது மோடி எனும் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு
அது கருடனை பார்த்து சவுக்கியமா என கேட்கத்தான் செய்யும்
யாரும் இருக்குமிடம் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே என கண்ணதாசன் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும்
ஒரு காலம் வரும் அன்று பரமசிவன் மோடி பாமரனாவார் அவர் கழுத்து பாம்புக்கு பாதுகாப்பு இருக்காது
அதுவரை பாம்பு ஆடட்டும் , எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டல்லவா? அப்படி இது பழனிச்சாமி ஆடும் காலம் அதற்கு முக ஸ்டாலினும் துணைபோகும் காலம்
மானிட வரலாற்றில் சோதனையினை சந்திக்காதவன் யார்?
செட்டிநாட்டு தங்கத்தை சேலத்து இரும்பின் துரும்பு உரசிபார்கின்றது
ப.சி என்பவருக்கு இது சோதனை காலம், அக்காலத்தில் கேட்க கூடா சொற்களை கேட்கத்தான் வேண்டும்
நிச்சயம் கடந்துவருவார்
காலம் மாறியும் ப.சி நிலைப்பார், ஆனால் வருங்காலத்தில் பழனிச்சாமி எங்கிருப்பார் எனப்துதான் தெரியவில்லை
அன்று யார் பூமிக்கு பாரம் என்பது தெரியும்
