கால்பந்தாக மிதிபடுவது தமிழக மக்கள்

இந்தியாவில் 7 அணுவுலைகள் இயங்குகின்றன, தமிழ்நாட்டில் இருக்கும் கல்பாக்கம், கூடங்குளம் போக கன்னடம், மகராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் , நொய்டா என மீதி 5 உண்டு

இந்த 5 அணுவுலையின் கழிவுகளும் இதுநாள் வரை அங்கேதான் வைக்கபடுகின்றன, இன்னும் தொடரும்

இப்பொழுது நாட்டின் மொத்த அணுகழிவும் கூடன்குளத்துக்கு வரும் என ஒரு கும்பல் கிளம்பிவிட்டது

அப்படியானால் மீதி 5 அணுவுலையின் கழிவுகள் இதுநாள்வரை எங்கே? என்றால் நிச்சயம் அங்கேதான்

கன்னடத்திலும், மராட்டியத்திலும், குஜராத்திலும், ராஜஸ்தானினும், டெல்லியிலும் உள்ள அணுவுலையின் கழிவுகள் இந்நாள் வரை அங்குதான் உண்டு

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அணுவுலையும் அணுகழிவும் உண்டு என்பதும், மற்ற மாநிலத்தில் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதும் சுத்தமான அயோக்கிய அரசியல்

இதெல்லாம் மத்திய அரசும் அணுசக்தி கழகமும் விளக்க வேண்டிய விஷயங்கள் , அவர்கள் நினைத்தால் நொடியில் விளக்கலாம்

இந்த சிக்கல் என்றல்ல, எல்லா சிக்கலுக்குமான சாவி அவர்களிடம் உண்டு, சென்னை குடிநீர் சிக்கல்வரை உண்டு

ஆனால் செய்யமாட்டார்கள் ஏன்?

தமிழக மக்கள் பொங்கி எழுந்து தமிழக இம்சை அரசியல்வாதிகளை அடித்து நொறுக்கி விரட்டவேண்டும் என்பது அவர்கள் திட்டம்

தமிழக மக்களே தமிழக கட்சிகளுக்கு சமாதிகட்ட வேண்டும் என்பது அவர்களின் தந்திர நகர்வு

ஆனால் அந்த திட்டத்தை தமிழருக்கு எதிரான அநீதி என சொல்லி திராவிடம், தமிழ் , இந்து எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு இன்னபிற விஷயங்களை ஊட்டி அப்படியே டெல்லிக்கு எதிராக திரட்டுவது இவர்கள் திட்டம்

இந்த இரு அரசியலுக்கு இடையே கால்பந்தாக மிதிபடுவது தமிழக மக்கள்