கால்பந்து உலகபோட்டி : அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள்

Image may contain: 1 person, playing a sport, stadium and outdoor

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள் வருகின்றன‌

வலிமையான இத்தாலி அணி தகுதி பெறாமல் இந்த ஆட்டத்திற்கே வரவில்லை அவர்கள் வரலாற்றில் 50 ஆண்டு காலத்தில் அதுதான் முதல்முறை

சாம்பியனும் அசைக்க முடியாத அணியுமான ஜெர்மன் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது எல்லோருக்கும் கடும் அதிர்ச்சி

இரண்டாம் உலகப்போர் காலதொடக்கங்களுக்கு பின்னால் அதாவது 80 ஆண்டுகளுக்கு பின்னால் இந்த வீழ்ச்சியினை சந்தித்திருக்கின்றது ஜெர்மன்

சிலமுறை கோப்பையினை வென்ற , கடந்த உலக கோப்பையில் கலக்கி எடுத்த அணி அது, பிரேசிலையும் அர்ஜென்டினாவினையும் அது துவைத்து எடுத்து கோப்பையினை தட்டிய ஜெர்மனின் இந்த வீழ்ச்சி நம்ப முடியாதது

அவர்கள் மெக்ஸிகோவிடம் தோற்றதை விட நேற்று தென்கொரியாவிடம் தோற்றதை யாராலும் தாங்கமுடியவில்லை

சிகரத்தை அடைந்தால் இறங்கித்தான் தீரவேண்டும் என்பார்கள், ஜெர்மனி அப்படி ஆகிவிட்டது

ஐரோப்பிய அணியா? லத்தீன் அமெரிக்க அணியா யாருக்கு உலக கோப்பை என்ற பந்தயத்தில் இப்பொழுது பிரான்ஸும், போர்ச்சுக்கலும், ஸ்பெயினும் இந்த பக்கம் வருகின்றன‌

பிரேசிலும் அர்ஜென்டினாவும் அப்பக்கம் வருகின்றன‌

குரோஷியா முதல் இன்னும் சில அணிகள் அட்டகாசமாக ஆடுவதால் முதல்முறை ஒரு அணி கோப்பையினை வெல்லும் அதிசயமும் நடக்கலாம்

எனினும் இப்போதைய எதிர்பார்ப்பு பிரேசில், இளைஞர் பட்டாளமும் மின்னல் வேக ஆட்டமும் அவர்களிடமே இருக்கின்றன‌

பார்க்கலாம்