காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ….

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!:கி.வீரமணி

மார்க்ஸின் கொள்கைகள் கியூபாவில், சீனாவில் கிளைத்தன என்றால் கொஞமாவது அர்த்தம் உண்டு

பெரியார் கொள்கைக்கும் ஜெர்மனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரே ஒருமுறை பெரியார் ஜெர்மன் சென்றாராம், அவ்வளவுதான் விஷயம்

ஜெர்மன் என்னமோ பெரியாரின் தத்துவத்தில் மூழ்கி கருப்பு சட்டை போட்டு பகுத்தறிவு பேசும் தேசம் போல அன்னார் கதைவிடுகின்றார், அப்படி பேசியிருந்தால் ஜெர்மன் உருப்பட்டிருக்கும்?

மிஸ்டர் வீரமணி, பெரியார் காசியில் கூட சிலமாதம் தங்கியிருந்தாராம், கங்கை கரையில் கிளைக்காத பெரியாரிசமா, ரைன் நதிகரையில் கிழித்தது?

அன்று ஜெர்மனியில் இருந்த நிர்வாண சங்கத்தை பெரியார் கண்டதாகவும், அவர் கலந்து கொண்டதாகவும் சில செய்திகள் உண்டு

இந்த வீரமணிக்கு அப்படி ஏதும் திட்டம் இருக்குமோ என கேட்க கூடாது, ஆனால் பெரியாரின் கொள்கைகளை அடிபிறழமால் பின்பற்றும் வீரமணிக்கு இதெல்லாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.