காவேரியினை பறிகொடுத்தது யார்
காவேரி விவகாரத்தில் ஓரளவு நியாயத்துடன் கொஞ்சம் குழப்பத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது
அதாவது காவேரி வாரியம் அமைக்கபடுமாம், அது டெல்லியில்தான் இயங்குமாம். இரு மாநிலங்களும் அதனை கேட்காமல் புது அணை கட்ட கூடாதாம்
நீர் பகிர்வினை இதுதான் பார்த்துகொள்ளுமாம்
இந்த முடிவினை அரசிதழில் அச்சடிப்பார்களா என்பது பற்றி உரிய தகவல் இல்லை
ஆனால் இவர்களை தாண்டி மத்திய அரசுக்கு அதிகாரமில்லை, என்ன நடந்தாலும் வாரியமே பொறுப்பு என உச்சநீதிமன்றம் துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பிற்று
இதெல்லாம் சரி, அடுத்தால் சொல்லியிருப்பதுதான் காமெடி
இரு மாநில அரசுகளும் முடிவெடுக்க முடியாவிட்டால் மத்திய அரசு உத்தரவிடுமாம்.
இதில் தமிழக அரசு கேட்க வேண்டிய கேள்வி இரண்டு
முதலாவது என்றைக்கு கன்னடம் மத்திய அரசு சொல்லி நீர் திறந்திருக்கின்றது?
இரண்டாவது சமீபத்தில் உத்தரவிட்ட 4 டிம்சி நீர் வரவே இல்லையே?
இது அவ்வளவு சரியான தீர்ப்பு என தெரியவில்லை
இனி இந்த வாரியத்தில் தகறாறு வரும், வாரியம் மத்திய அரசிடம் செல்லும், அது நீதிமன்றம் செல்லும்
பின் என்னாகும்?
வழக்கு முதலில் இருந்தே தொடங்கும்
காவேரியினை பறிகொடுத்தது யார் என்ற முதல்வர் வரிசையில் பழனிச்சாமியும் சேர்ந்துகொள்வார்
எனினும் வாரியம் அமைக்கபட்டு எல்லாம் முறையாக நடந்தால் மிக்க மகிழ்ச்சி
இப்போதைக்கு தீர்ப்பு ஓரளவு நியாயமாக வந்திருப்பதால் இந்த தமிழக கட்சிகளும், குபீர் போராளிகளும் வாய்திறக்க முடியாது, பூட்டு போட்டாயிற்று