காவேரி பிரச்சினையில் குஷ்பு எங்கே

Image may contain: 1 person, smiling, close-up

காவேரி பிரச்சினையில் குஷ்பு எங்கே என பலர் கேட்டுகொண்டிருக்கின்றான்

காவேரி பிரச்சினையில் இவர்கள் சொல்வதென்ன? காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தள்ளிபோட்டு துரோகம் இழைக்கின்றது

மத்திய அரசு என்றால் யார்?

சாட்சாத் மோடி

ஆக இவர்கள் எதிப்பது அவரைத்தான்

தலைவி என்ன செய்துகொண்டிருக்கின்றார்? அவரின் ஒவ்வொரு பேச்சிலும், டிவிட்டர் எழுத்திலும், பேட்டியிலும் மோடியினை சாடிகொண்டே இருக்கின்றார்

இவர்களாவது காவேரியில் மட்டும் எதிர்க்கின்றார்கள், அவரோ எல்லா விஷயங்களிலும் மோடி காட்டும் பாரபட்சம் பற்றி விளாசி தள்ளுகின்றார்

ஆக அவரும் மோடியினைத்தான் திட்டுகின்றார், இவர்களும் மோடியினைத்தான் திட்டுகின்றார்கள் ஆனாலும் குஷ்பு ஏன் போராட வரவில்லை என கேட்கின்றார்கள்

(சித்தராமையா அரசு சரியில்லை என்றால் மோடி டிஸ்மிஸ் செய்யலாம் ஆனால் ஏன் செய்யவில்லை. ஆக தவறு முழுக்க மத்திய அரசிடம் இருக்கின்றது, இதனை எடுத்து சொல்லா தமிழக அரசு இன்னொரு மனநோயாளி)

நீங்கள் காவேரிக்காக மோடி என்று கூட பெயர் சொல்லாமல் பயந்து நடுவண் அரசு, மத்திய அரசு என மென்னி போராடுகின்றீர்கள்

ஆனால் எங்கள் தலைவி பகிரங்கமாக மோடி பெயரை சொல்லி குற்றம்சாட்டுகின்றார்

எது பெரிய விஷயம் என்றால் தலைவி குஷ்புவின் தைரியமே பெரிது

ஆக தமிழக அழிச்சாட்டியங்களே. தலைவி ஒவ்வொரு நொடியும் மோடி அரசின் பொய்முகங்களை உரித்துகொண்டிருப்பவர்

அதனால் நீங்கள் உண்மையான போராளிகள் என்றால் தலைவி பின்னால் அணிவகுத்து போராட வாருங்கள்

அதைவிட்டுவிட்டு சும்மா மத்திய அரசு ஒழிக என கோஷமிட்டுவிட்டு குஷ்பு எங்கே போனார்? என கேட்டால் சங்கம் சும்மா இருக்காது

கடந்த 4 ஆண்டுகளில் தலைவி மத்திய அரசிடம் கேட்ட கேள்விகள் ஏராளம், அதற்கு ஒன்றிற்கு கூட பக்தாள் இன்னும் பதிலளிக்கவில்லை

அதனால் சங்கம் உறுதியாக சொல்கின்றது, இன்றைய தேதியில் மோடி அரசுக்கு எதிராக தமிழகத்தை வழிநடத்தும் தகுதியும் தைரியமும் தலைவி குஷ்பு ஒருவருக்கே இருக்கின்றது