கிம்மின் மாறிய மனம் இப்படியே இருக்கட்டும், வாழ்த்துக்கள் மிஸ்டர் கிம்

Image may contain: 2 people, people smiling, suit

உலகெல்லாம் ஒரு மாதிரியானவர்கள் திருந்தும் நேரமிது

பெரியார் சிலை சர்சையில் தமிழிசை கொஞ்சம் திருந்தி இருபது தெரிகின்றது, அமித்ஷா கூட சிலைகளை இடிப்பது கட்சி கொள்கைக்கு எதிரானது(!) என்கின்றார்

இப்படி இந்தியாவின் அல்ட்ராசிட்டிகள் அமைதி கொடுக்க, உலகின் மிகபெரிய அல்ட்ராசிட்டியான வடகொரியாவும் ஆறுதல் கொடுத்திருக்கின்றது

Image may contain: 9 people, people smilingஅதாவது தென்கொரியாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை வடகொரியா அனுப்பியதில் இருந்து இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நடக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது

இப்பொழுது தென்கொரிய அரசு குழு வடகொரிய அதிபரை சந்தித்திருக்கின்றது, வடகொரிய அதிபரும் விருந்தெல்லாம் கொடுத்திருக்கின்றார்

பேச்சு நடந்திருக்கின்றது, நான் ஒன்றும் அவ்வளவு பொல்லாதவன் இல்லை தெரியுமா என வடகொரிய அதிபர் கண்களை எல்லாம் கசக்கி இருக்கின்றார்

அப்படி கண்கள் பனித்தது இதயம் கனிந்தது என இரு நாட்டு பிரதிநிதிகளும் உருகியிருக்கின்றார்கள்

மெதுவாக தென்கொரியா அவரின் வீர விளையாட்டான ராக்கெட், அணுகுண்டு பற்றி பேசியிருக்கின்றது, பேச்சின் முடிவில் இப்போதைக்கு ராக்கெட் சோதனை செய்யமாட்டேன் என உறுதி அளித்தாராம் வடகொரிய அதிபர்

அத்தோடு அந்த டிரம்புடனும் நான் பேச தயார், ஆனால் அணு ஆயுதத்தை கைவிட மாட்டேன், முடிந்தால் இந்த நிபந்தனை இன்றி அவரை பேச சொல்லுங்கள் என சொல்லியும் அனுப்பி இருக்கின்றார்

இனி அடுத்தமாதம் தென் கொரிய அதிபரையே சந்திக்க போகின்றாராம் கிம்

எப்படியோ அவர் மனம்மாறி இவ்வளவு தூரம் வந்திருப்பது, போர் மேகங்களை கலைய செய்து பலகோடி மக்கள் மனதில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது

இப்பொழுது வடகொரிய தென் கொரிய மக்கள் “வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே” எனும் பாடலை கொரிய மொழியில் பாடுகின்றார்களாம்

மிக மிக மகிழ்ச்சியான விஷயம் இது

கிம்மின் மாறிய மனம் இப்படியே இருக்கட்டும், வாழ்த்துக்கள் மிஸ்டர் கிம்