கியூபாவுக்கு மருத்துவம் சொல்லி கொடுத்தேன் தம்பி!
“கொரோனா உங்களுக்குத்தான் புதுசு, எங்களுக்கெல்லாம் பழசு. அண்ணன் தமிழ்செல்வன கொன்னுட்டா பிரபாகரன் பயந்து சரணடைவார்னு சிங்களன் நெனச்சான், அண்ணன் அடங்குவாரா? இதனால எங்க இருந்தாலும் சாகட்டும்னு ஒரு குண்டுல கொரோனா தூக்கி போட்டுட்டான், எல்லோருக்கும் இருமல் தொண்டவலி
அண்ணன் அவசரமா வந்து ஒரு கண்டெய்னர திறந்தாரு, பூரா சுருட்டு. ஆளுக்கொண்ணு தூக்கி போட்டு குடிங்கண்ணு கத்துனாரு , நல்லா இழுத்தோம் , கொஞ்ச நேரத்துல கொரோனா அறிகுறியே இல்ல
எப்படிண்ணேன்னு கேட்டேன், தம்பி என்னை கொல்ல ஏகபட்ட முயற்சி நடந்துச்சி, ஒரு நாள் கடல்ல குதிச்சி நீந்துனேன் கரையேறி பார்தால் கியூபா தம்பி, அங்கே எல்லோரும் சுருட்டு குடிச்சி சுத்திட்டு இருந்தாங்க , எனக்கு கடும் பசி தம்பி, ஊருல ஆமையும் பண்ணியும் இறாலுமா தின்னவன் தம்பி, பசின்னா தாங்குமா?
அங்க ஒரு தேன் கூடு இருந்து, 300 ஆண்டுகாலமா இருந்தாம் கியூபர்களால எடுக்க முடியலியாம், நான் சுருட்டு புகைச்சிட்டே தேன் கூடு பக்கம் போனேன், தேனீ எல்லாம் புகையில ஓடிட்டு தேன் எடுத்து சாப்பிட்டு எல்லோருக்கும் கொடுத்தேன், விஷயம் பிடல் காஸ்ட்ரோவுக்கு போயிட்டு தம்பி
காஸ்ட்ரோ அசந்துட்டார், அவரையும் கொல்ல சி.ஐ.ஏ அலைஞ்ச நேரம் விஷ கிருமி பரப்புறாங்கன்னு சந்தேகம் இருந்து, நான் செஞ்ச காரியம் அவர யோசிக்க வச்சி, உடனே கொஞ்சம் கிருமி நாசினி செய்ய சொன்னார் சுருட்டுல கலந்தார் குடிச்சிட்டே இருந்தார்,
அமெரிக்கா கொரோனா ஸ்பிரே அடிச்சும் அவர் சாகல காரணம் சுருட்டு, கடைசி அவர் சுருட்ட விடவே இல்ல தம்பி
கியூபாவுக்கு மருத்துவம் சொல்லி கொடுத்தேன் தம்பி, அதுலதான் கியூப மருத்துவர்களுக்கே பேர் வந்துச்சி
அதுக்கப்புறம் எனக்கு காட்டுமாட்டு கறிபோட்டு சேகுவாரே மாதிரி வசிக்க பாத்தாரு, நான் கடல்ல குதிச்சி தப்பி ஈழம் வந்துட்டேன், அந்த கோபத்துலதான் கடைசி வர திட்டிகிட்டே இருந்தாரு
ப்புஹஹஹஹா.. புஹஹஹஹா
கடைசி கட்டத்துல தம்பி சுருட்டு பீரோ எல்லாம் முக்கியம், ஒரு நாள் தமிழனுக்கு தேவைடா தம்பின்னு ஒரு இடம் சொல்லி கடலுக்குள்ள பாலீதீன் கவர் சுத்தி போட்டுட்டாரு
அந்த இடம் எனக்கு தெரியும் ஆனா சொல்லமாட்டேன், பூரா பயலும் கதறணும் டிரம்பும், ஜின்பெங்கும் புட்டீனும் கதறி என் கால்ல விழுந்து கேக்கணும்
அப்போ நான் சொல்வேன், ஈழநாடு அமைத்து என்ன அதிபராக்கு, தமிழ்நாட்டை பிரிச்சி என் தம்பிய அதிபராக்கு அப்புறம் தாரேன், ராஜபக்சேவ தூக்குல போடு இல்லாட்டி கிடந்து சாவு
புஹஹஹஹஹஹ.. புஹஹஹ.. புஹஹஹ்ஹா..”