கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை
அந்த கிரண்பேடி ஒன்றும் தவறாக சொல்லவில்லை
மனிதனின் காதுகளுக்கு குறிப்பிட்ட அதிர்வு ஒலிகளை மட்டுமே கேட்கும் சக்தி உண்டு, சில ஒலிகள் அளவு குறைந்தோ கூடியோ இருந்தால் மானிடனால் உணரமுடியாது
சூரியனை ஆய்வு செய்த சில கோள்கள் மட்டுமல்ல சில வான்வெளி ஆய்வுகள் சிறப்பு கருவிகள் மூலம் அந்த நுண்ணொலியினை பதிவு செய்து அதை விஞ்ஞான கருவிகள் மூலம் மானிட காது கேட்கும் வகைக்கு கொண்டுவந்தால் அது “ஓம்” எனும் ஓசையில் இருப்பதாக முன்பே சொன்னார்கள்
இது உலகில் எப்பொழுதோ சொல்லபட்ட விஷயம்
தகவல் தொடர்பு உலகில் இப்பொழுதுதான் அது கிரண்பேடி காதுக்கு எட்டியிருக்கின்றது அதை அம்மணி சொல்லிவிட்டார்
அவரை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்
அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லை, இது என்றோ சொல்லபட்ட விஷயம்
ஒரு வெடிப்பின் மூலம் உருவான பிரபஞ்சம் இது, அந்த அதிர்வு விண்வெளியின் எல்லா பொருளிலும் உண்டு அது ஒரு அதிர்வு ஒலி மானிட காதால் உணரமுடியா ஒலி என்கின்றது விஞ்ஞானம்
இதை பிரணவ மந்திரமான “ஓம்” என சொன்னது இந்துமதம், அதுதான் தொடக்கம் என்றது
ஆதியிலே வார்த்தை இருந்தது என அதை சொல்வது பைபிள்