கிரிக்கெட் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்றாலும் மிக நிதானமும், ஒரு வித மதிநுட்பமும் வேண்டும்
இது மதியால் ஜெயிக்கும் நாடு
அதனால்தான் செஸ் விளையாட்டில் ஆனந்த் போல கிரிக்கெட்டில் சிலர் அடையாளமிட்டார்கள்
அதில் சச்சின் டென்டுல்கர் மகா முக்கியமானவர்.
கபில்தேவால் திரும்பி பார்க்க வைத்த இந்திய கிரிக்கெட் அணியினை அப்படியே நிறுத்தி கவனத்தை தக்க வைத்தவர்
உலக அளவில் இந்திய கிரிக்கெட்டின் மிக பெரும் அடையாளமாகி, கிரிக்கெட் மேதை பிராட்மேனின் வாரிசாகவே அறியபட்டவர்
சச்சினால் வளர்ந்த தலைமுறை அவரை மறக்க முடியாது
ஆயிரம் கோலி, டோனி வந்தாலும் சச்சினின் இடம் என்றும் வேறு உயரம்
இன்று ஐபிஎல்லில் இறக்கினாலும் 100 ரன்கள் அட்டகாசமாக அடிப்பார் சச்சின்
அற்புதமான ஆட்டக்காரர். அவரின் ஷாட்கள் சில மகா அற்புதமானவை, அவரால் அன்றி யாராலும் ஆடமுடியா ஆட்டங்கள் அவை
இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் கவுரவமும் அடையாளமுமான அவருக்கு இன்று பிறந்த நாள்
சொல்ல நிறைய இருக்கின்றது
ஆனால் அவரிடம் திறமையும் இருந்தது. அந்த கிரிக்கெட் காலங்கள் இப்பொழுது இருப்பது போல் பல விதிகள் தளர்ந்தது அல்ல, அன்றிருந்த ஆட்டகாரர்களும் சாமான்யம் அல்ல
வால்ஷ், அம்ப்ரோஸ் என பெரும் ஜாம்பாவன்களிடையே குழந்தை போல வந்து நின்ற அவரை மறக்க முடியாது, போராடினார்
பெரும் சண்டமாருதங்களை எல்லாம் அசால்ட்டாக சமாளித்தார், அன்று பெரும் புயலாக எழும்பிய மெக்ரத்தின் பந்துகளை அவர் சமாளித்த விதமெல்லாம் ஸ்டீவ் வா கைதட்டிய காட்சிகள்
உலக அரங்கில் முதல் 20 ஓவருக்குள் அடித்து நொறுக்கும் வித்தையினை ஸிர்காந்த் தொடங்கி வைத்தாலும், அதனை நிரூபித்தவர் டெண்டுல்கர், அவரை தொடர்ந்துதான் அன்வர், அப்ரிடி, ஜெய சூர்ய, கில்கிரிஸ்ட் எல்லாம் வந்தார்கள்
முரளிதரனையும், ஷேன் வார்னேவினையும் சச்சின் துவைத்து எடுத்த காட்சிகள் கிரிக்கெட் கல்வெட்டுக்கள்
எல்லா நாட்டு பவுலரும் அவரிடம் சரணடைந்தார்கள், 6 பந்தினையும் 6 கோணத்தில் வீசும் அக்ரம் கூட அவரை சில நேரங்களில் அசைக்க முடியவில்லை
சச்சின் ஏன் அன்று அதிகம்
சோபிக்கவில்லை என்றால் அன்று அவருக்கான கூட்டணி இல்லை, அசாருதீனும் ஜடேஜாவும் தவிர அவருக்கு ஈடுகொடுக்கும் ஆட்டக்காரர் அன்று இல்லை
அதுவும் ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்வு சொற்பமே, பல வீரர்கள் வந்தார்கள் சென்றார்கள். டிராவிட் லட்சுமணன் எல்லாம் டெஸ்ட் வகையறா
கங்குலி வேகபந்தை கண்டாலே முழிக்க கூடியவர்
சேவக், யுவராஜ்சிங், டோனி எல்லாம் பின்னர்தான் வந்தார்கள், சச்சினுக்கான சரியான ஜோடிகள் பின்னாளில்தான் கிடைத்தன
தனி ஒரு மனிதனாக அவர் போராடியதைத்தான் இப்பொழுது விமர்ச்சிக்கின்றார்கள்
இந்த இளைஞர் படை காலத்திலும் என்னால் 200 ரன் அடிக்க முடியும் என காட்டிவிட்டுத்தான் அவர் விடைபெற்றார்
நிச்சயம் சச்சினுக்கு அப்பொழுது விடைபெறும் எண்ணம் இல்லை, ஆனால் பல அழுத்தங்களே அவரை விடைபெற செய்தன, விட்டிருந்தால் வரும் உலககோப்பை வரை அட்டகாசமாக ஆடியிருப்பார்
கிரிக்கெட் மீதான அவரின் உழைப்பும் காரணம், இன்றுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத வீரர்களில் கபில்தேவிற்கு பின் அவர்தான்
கிரிக்கெடை தவிர எதிலும் அவர் பெயர் வந்ததில்லை, அப்படி ஒரு தொழில் பக்தி
சச்சினின் பெருமையினை சொல்ல நிறைய உண்டு, உலக பிரபல பந்துவீச்சாளர்களை கேளுங்கள், சச்சினின் விக்கெட்டை கைபற்றியதை பெருமையாக சொல்வார்கள், அவர்கள் பந்துவீச பயந்ததும் அவருக்கே என்பார்கள்
இன்றுவரை இந்தியாவில் உருவாகியிருக்கும் அனைத்து அதிரடி ஆட்டகாரர்களுக்கும் அவரே முன்னோடி
உச்சமாக கிரிக்கெட் மேதை பிராட்மேன் சொன்னார்,” நான் இளம்வயதில் ஆடிய அற்புத கிரிக்கெட்டை சச்சினிடம் மட்டுமே காண்கின்றேன்”
மாபெரும் கிரிக்கெட் மேதை தன் மனமார சொன்ன வார்த்தை அது, அர்ச்சுனனை பீஷ்மர் வாழ்த்திய வாழ்த்து அது
நிச்சயம் சச்சினுக்கு மராட்டிய பின்புலம் இருந்தது ஆனால் அது மிக தேவைபடாதபடி நுட்பமான திறமையும் அதிகம் இருந்தது, அவர் கிரிக்கெட் வரலாறாக மாற அதுதான் காரணம்
மிக வலுவான தலைமுறை வீரர்கள் இங்கு சேவக், டோனி, கோலி, விஜய் சங்கர் என உருவாகி வர அவர்தான் காரணம்
கிரிக்கெட்டில் அவரின் புரட்சி நிச்சயம் வரலாறு
அந்த கிரிக்கெட் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்