கிரீஸ் நாட்டை நோக்கி செல்கின்றது ஈரானிய கப்பல்
கிரீஸ் நாட்டை நோக்கி செல்கின்றது ஈரானிய கப்பல் இனி அங்கு சில நாட்கள் தரித்துவிட்டு மறுபடி ஈரான் நோக்கி வரும்
இந்நிலையில் ஈரான் அருகே அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு கடல் படை பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றன , அமெரிக்கா மத்திய கிழக்குக்கான கடற்படை பிரிவினையும் இஸ்ரேல் தன் பலமான கடற்பிரிவினையும் இறக்கி இருக்கின்றது
என்ன பயிற்சி எடுத்தார்கள் என்பதை அவர்கள் தானே சொல்ல வேண்டும்? சொல்லியும் விட்டார்கள்
கப்பல்களை பிடிப்பது எப்படி என பயின்றோம் என்கின்றார்கள், அதாவது சர்ச்சையான கப்பல் வரும்பொழுது ஹெலிகாப்டரில் சென்று இறக்கி எல்லோரையும் பிடித்து கப்பலை எப்படி கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சியாம்
இது ஈரான் கப்பலை மிரட்டும் முயற்சி என்பது எல்லோருக்கும் தெரியும் எனினும் தெரியாதது போல் கேட்டால்தானே செய்தி வெளியிட முடியும்? அதனால் செய்தியாளர்கள் இது எதற்காக? என கேட்டார்கள்
உடனே அமெரிக்க தரப்பு இது கடலில் கப்பல்கள் கடத்தபட்டால் உடனே அதை மீட்கும் முயற்சி என சிரிக்காமல் சொல்லிவிட்டது
இஸ்ரேலும் கடும் தயாரிப்பில் இருக்கின்றது, ஒருவேளை ஈரான் யுத்தம் என வந்தால் ஈரான் சும்மா இராது
ஈராக், சிரியா, ஏமன், லெபனான் என ஈரானிய கொடி பறக்கும் நாடுகள் வழியாக இஸ்ரேலை நொறுக்கிவிடும் என்பதும் அதற்கு தெரியும்
இதனால் ஈராக்கில் ஈரானின் ரகசிய குடோன்கள் அடையாளம் தெரியாத விமானங்களால் நொறுக்கபட்டிருக்கின்றன
இஸ்ரேலியர் அபப்டித்தான் எல்லை தாண்டி அடிக்கும்பொழுது எல்லாவற்றையும் மறைப்பார்கள், இந்திய தரப்பு போல தம்பட்டம் எல்லாம் இல்லை
இப்பக்கம் கடலில் பயிற்சி என அமெரிக்க தரப்பு முறைக்கின்றது, அவர்களுடன் ஆஸ்திரேலியா “மே ஐ கம் இன்” என வந்து கொண்டிருக்கின்றது
பிரிட்டன் தனி கொடியோடு தனி அணி
இந்நிலையில் விரைவில் ஈரான் கப்பல் சொந்த நாடு திரும்பும், அப்பொழுதுதான் தெரியும் விவகாரம்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மாபெரும் கவுரவ பிரச்சினையாக மாறியிருக்கின்றது அந்த கப்பல்
அமெரிக்காவும் விடாது , ஈரானும் பார்த்துகொண்டிருக்காது
எங்கள் கப்பலை தொட்டால் நாங்கள் கொடுக்கும் பதிலடியில் எதிரிக்கு குடிக்க கூட நீர் இருக்காது என மிரட்ட தொடங்கிவிட்டது ஈரான்
ஆம் அதை ஈரானால் செய்யமுடியுமா என்றால் வாய்ப்பு உண்டு. நீர் ஆதாரம் குறைந்த அரபு பகுதிகளில் சில இடங்களை நாசமாக்கினால் போதும்
விவகாரம் அதிரடியாக திசைமாறுகின்றது, பார்க்கலாம்