கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

அந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்பவர் நிச்சயம் கிரிக்கெட்டுக்கே ஒரு திருப்புமுனை கொடுத்தவர்உலகம் கொண்டாடிய முதல் கிரிக்கெட் தமிழர், அவருக்கு பின் அந்த இடத்துக்கு நெடுங்காலம் கழித்தே முரளிதரன் வந்தார்இருவரும் தமிழரின் கிரிக்கெட் அடையாளங்கள்அந்த 1980களின் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா வசம் இருந்தது. இந்தியா இன்றைய கென்யா போல தடுமாறிகொண்டிருந்ததுகிரிக்கெட் சாஸ்திரபடி முதலில் விக்கெட் விழாமல் காப்பவனே மாபெரும் ஆட்டக்காரன் என அறியபட்டான், அடிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்கவாஸ்கர் என்றொருவர் உண்டு, மனிதர் போடும் மட்டைக்கு கிரிக்கெட் பந்தே கண்ணீர்விட்டு அழும், ஆனால் அவர்தான் சிறந்த ஆட்டக்காரர்வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் அன்று அதிரடி ஆட்டக்காரர் உண்டு ஆனால் கடைசி நேர நெருக்கடியில் அதாவது இனி அடிக்க ஓவர் இல்லை எனும் நிலையில்தான் வெறியாட்டம் ஆடுவார்கள்உலக அரங்கில் முதல் 10 ஓவருக்குள் அடிக்கும் ரன்களே வெற்றிக்கு வழி என முதலில் அதிரடியாக சொல்லிகொடுத்தது ஸ்ரீகாந்த் என்பவர்தான்அந்த வழிதான் பின் டெண்டுல்கர், ஜெயசூர்ய, அப்ரிடி , கில்கிரிஸ்ட், ரோகித் சர்மா என தொடர்ந்து இன்று சாஸ்திரமே மாறிவிட்டது1980களின் இந்திய கிர்க்கெட் முகம் அவர், இம்ரான்கானுக்கும் அவருக்குமான கிரவுண்ட் சண்டைகள் ஏக பிரசித்திஅன்றைய மிரட்டல் பவுலரான வெஸ்ட் இண்டீஸின் மாலகம் மார்ஷல் பந்தில் அசால்ட்டாக சிக்ஸர் அடித்த ஸ்ரீகாந்த் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவரானார்இந்தியா முதல்முறையினை உலககோப்பையினை வென்றபொழுது அவரும் இருந்தார், அந்த ஆட்டமும் சிறப்பாக இருந்ததுசென்னைக்காரர் என்பதால் அன்றே கருணாநிதி வீட்டுக்கு அழைத்து ஸ்ரீகாந்த்தை வாழ்த்தினார், பின்னாளில் அரசு சார்பாக ஏதோ பரிசு கொடுத்ததாக நினைவுஆம் கருணாநிதி அப்படித்தான் மக்கள் ஒருவரை கொண்டாடிவிட்டால் ஆளுக்கு முன்பாக அவர் அருகில் சென்று அமர்ந்து கொள்வார், அவர் பிராமணனாய் இருந்தாலும் சிக்கல் இல்லைஅரசியலில் அது ஒரு சாமார்த்தியம்1980களின் கிரிக்கெட் பிரியர்கள் ஒரு காலமும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் என்பவரை மறக்க முடியாதுஅவர் நேற்று தன் சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாடியிருக்கின்றார், அதாவது ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள்
பிடிக்கின்றது. அஅறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நக்ஷத்திரத்தில், எந்த
திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்குப்
பின்னும். இந்த அறுபதாம் ஆண்டை சஷ்ட அப்த பூர்த்தி என்பார்கள்அவ்வகையில் ஸ்ரீகாந்துக்கு 60 வயது ஆகின்றதுஇந்திய கிரிக்கெட்டில் மறக்கமுடியா வீரர் அவர், 1980களின் கிரிக்கெட்டை கபில்தேவுடன் அவர் பகிர்ந்திருந்தார்பெரும் திருப்பங்களும் ஆச்சரியமான நுட்பங்களும் கொடுத்து கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் அவர், இந்திய இளம் தலைமுறைக்கு அவர் பீஷ்மர்அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இந்தியா வெற்றிமேல் வெற்றி குவிப்பதை காண வாழ்த்துவோம்எல்லாம் வல்ல பரம்பொருள் அவர் அடித்த வேகமான ரன்கள் போல எல்லா ஆசீகளையும் நிரம்ப பொழியட்டும்