கில்லாடி கிளைவ் : 4

கில்லாடி கிளைவ் : 4

Image may contain: one or more people

கிளைவ் டூப்ளேவினை நினைத்து பொருமிகொண்டிருந்த பொழுது டூப்ளேவோ இப்போது இருக்கும் பாஜக போல திட்டமிட்டுகொண்டிருந்தான்

என்ன திட்டம்?

எப்படியும் நாம் ஆளவேண்டும், அதற்கு வாய்ப்பாக ஒரு சமஸ்தானத்தை கைபற்றி நம் கட்டுபாட்டில் வைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு இருந்தது,

அதாவது தமிழகத்தில் ஏதாவது பெரும் கட்சியில் வாரிசு சண்டைவந்தால் நாம் எப்படியாவது அதை பயன்படுத்தி காலூன்ற வேண்டும் என பாஜக திட்டமிடுகின்றது அல்லவா அப்படி

டூப்ளேவிற்கு இந்தியாவில் இணைத்திருந்த இந்திய வீரர்கள் மேல் நம்பிக்கை இருந்தது, விசுவாசமான அதே நேரம் மிக உறுதியும் பலமும் கொண்டவர்கள் இந்தியர்கள் ஆனால் சிலம்பம், கத்தி என சண்டை இடுகின்றார்களே தவிர ஐரோப்பிய சண்டைமுறை தெரியவில்லை

துப்பாக்கி, பீரங்கி என நவீன பயிற்சிகளை கொடுத்தால் மிகபெரும் பலம் பொருந்திய படையினை உருவாக்கலாம் என திட்டமிட்டான் அப்படி ஒரு படையும் உருவாக்கி வைத்திருந்தான்

வாய்ப்புக்காக டூப்ளே எனும் கொக்கு புதுச்சேரியில் காத்திருந்தது

அப்பொழுது 1748ல் அரசியல் நிலை எப்படி இருந்தது?

Image may contain: outdoorஆற்காடு நவாப் என்பவர் போலவே அவருக்கு மேற்பட்ட பதவி நிஜாம் என்றொருவர் இருந்தார், நிஜாம் எனும் உருது சொல் கவர்னர் என்ற பொருளில் வரும்

அதாவது நவாப் என்பவர் முதல்வர் என்றால் நிஜாம் என்பவர் கவர்னர்

இந்த நிஜாம்களின் பூர்வீகம் உஸ்பெக்கிஸ்தான், அந்த உஸ்பெக்கின் மாவீரன் தைமூர் என்றொருவன் டெல்லி மீது பாபருக்கு முன்பே படையெடுத்திருந்தான் அப்பொழுது இப்பக்கம் வந்தவர்கள்

பாபரும் தைமூரின் வாரிசு என்பது செவிவழி செய்தி

அந்த உஸ்பெக் வம்சம் முகலாயருக்கு தூரத்து சொந்தம் என்பதால் மிக உயர்ந்த பதவிகளில் அமர்த்தி இருந்தனர், அப்படி தென்னக பகுதிகளின் நிஜாமாக ஒருவர் அவுரங்க சீப்பால் அமர்த்தபட்டார் அவர் பெயர் உல் முக்

மொகலாய வம்சம் இருக்கும் வரை எல்லாம் சரியாக நடந்தது, ரஜினி பாஷையில் சொன்னால் சிஸ்டம் சரியாக இருந்தது

மொகலாயர் கை வீழ்ந்த அவர்கள் மராத்தியர்களுடன் பெரும் கைகலப்பு செய்த காலங்களில் இங்கு சிஸ்டம் கெட்டுவிட்டது

நிஜாமும் நவாப்பும் பன்னீரும் பழனிச்சாமியும் போல உள்ள்ளூர மோதிகொண்டார்கள்

டெல்லி சுல்தானுக்கு வரி எல்லாம் கட்டமறந்தார்கள், டெல்லியில் இருந்து ஓலை வந்தால் “மராத்தியரை அடக்கிவிட்டு இப்பக்கம் வரவும், எங்களை பாதுகாக்க முடியாத உங்களுக்கு ஏன் வரி என வசனம் பேசிவிட்டு நட்பாக இருப்போம் சரியா? இதோ பரிசு” என மட்டும் அனுப்பி வைத்தார்கள்

டெல்லி பேரரசரும் மராத்தியரிடம் அடிபட்டுகொண்டே அந்த பரிசையும் வாங்கிகொண்டார்கள்

இந்த முதல் நவாப்பின் முல்முக்கின் பேரன் முபர்சங் வடிவில் டூப்ளேவின் கனவிற்கு உருவம் கிடைத்தது

முபர்சங் அப்பொழுது கன்னட நவாபாய் இருந்த அன்வர்தீன்கான் என்பவருடன் தகறாறில் ஈடுபட்டான், அதாவது நீ எனக்கு கட்டுபட்டவன் வரிகொடு

அன்வர்தீன்கான் என்ன சொன்னாரென்றால் “நீங்கள் முகலாயருக்கு கப்பம் கட்டாதபொழுது நான் ஏன் உங்களுக்கு கட்டவேண்டும்?”

அதாவது பாஜக அரசு முடிந்தபின் பன்னீரும் பழனிச்சாமியும் எப்படி மோதபோகின்றார்களோ அப்படி மோதிக்கொண்டார்கள் முபர்சிங்கும் அன்வர்தீன்கான் என்பவரும்

இதில் டிடிவி தினகரன் போல் ஒரு பாத்திரம் உள்ளே வந்தது அவர் பெயர் சாந்தா சாகிப்

யார் சாந்தா சாகிப்?

அன்வர்தீன்கானுக்கு முன்பிருந்த நவாபின் மருமகன், மாமன் சொத்து தனக்கே என ஆந்திர சந்திரபாபு நாயுடு போல் சொல்லிகொண்டிருந்தவர்

சாந்தா சாகிப் முபர்சங்கினை சந்தித்தார், நாம் இருவரும் இணைந்து அன்வர்தீர்கானை அடித்து நொறுக்கி ஆட்சியினை கைபற்றுவோம் அதன் பின் நான் நவாப் உனக்கு ஒழுங்காக வரிகட்டுவேன் என வாக்குறுதி கொடுத்தான்

முபர்சிங் சாந்தா சாகிப் கூட்டுபடை உருவானது ஆனாலும் அன்வர்தீன்கானின் படை பெரிதாய் இருந்தது

இதனால் தமிழக கட்சிகள் கூட்டணி சேர்க்க இந்த ராமதாஸ், வைகோ, திருமா போன்ற கட்சிகள் இருப்பது போல அன்று மராத்தியரில் சில குழுக்கள் இருந்தன‌

குழு என்றால் ஒன்றுமல்ல, பணம் கொடுத்தால் ஆயிரம் பேர் வந்து சேர்ந்து அடிப்பார்கள் அவ்வளவுதான், கூலிப்படையின் மூலம் அது

ஆனால் மராத்தியரை சேர்க்க பலத்த யோசனை செய்தான் சாந்தா சாகிப், காரணம் அவர்கள் இந்துக்கள் இஸ்லாமிய ஆட்சியினை விரும்பாதவர்கள், நாளை நம்மையே தள்ளிவிட்டு ஆட்சியினை பிடிப்பார்கள் அவர்களை தவிர்ப்பது நல்லது என முடிவு செய்தான்

அப்படியானால் யாரை அழைப்பது? அவர்கள் முகத்தில் தோன்றிய உருவம் டூப்ளே

ஆம் பிரெஞ்சுக்காரர்கள் அட்டகாசமான தேர்வு, இருக்கும் ஐரோப்பியரில் அவர்கள்தான் பலமானவர்கள், அவர்களை சேர்த்துகொண்டு பதிலுக்கு வியாபார அனுமதி மட்டும்கொடுத்தால் போதும் , நிச்சயம் அவர்களால் ஆபத்து இல்லை என சாந்தா சாகிப் கூட்டணி முடிவு செய்தது

வாய்பிற்காக காத்திருந்த டூப்ளே, உறுமீனை கண்ட கொக்கு போல சட்டென பிடித்துகொண்டான்

முபர்சங்கினை வைத்து ஆட்சியினை பிடிக்கும் சந்தா சாகிப்பின் திட்டம், சந்தா சாகிப்பினை வைத்து ஆற்காடு அரசை கைபற்ற திட்டமிட்டான் டூப்ளே

இவர்கள்தான் களத்தில் இருந்தார்கள், கிளைவ் சென்னை கோட்டையில் குமாஸ்தாவாக இருந்தான்

அன்வர்தீன்கானுக்கும் முபர்சங் சாந்தாசாகிப்புக்குமான சண்டை ஆம்பூரில் நடந்தது, டூப்ளே 2000 இந்திய வீரர்கள் மற்றும் 400 பிரெஞ்ச் வீரர்களை அனுப்பியிருந்தான் அவனும் களத்தை கண்காணித்து கொண்டிருந்தான்

கர்நாடக போர் என வரலாறு சொல்லும் போர் தொடங்கிற்று

போரில் அன்வர்தீன்கானின் படைகளை நன்கு பயிற்சி பெற்ற பிரெஞ்ச் படைகள் உதவியுடன் முபர்சிங் படை வென்றது அன்வர்தீன்கான் கொல்லபட்டார்

அன்வர்தீன்கானின் மகன் முகமது அலி சிறிய படையுடன் திருச்சி சென்றார், மலைகோட்டையில் பதுங்கி கொண்டார்

பெரும் வெற்றியில் முபர்சங் தென்னக நிஜாம் ஆனார், சந்தா சாகிப் நவாப் ஆனார், யாவரும் நலம்

யுத்ததிற்கு உதவியதாக இரண்டு லட்சம் பவுண்டுகளை பணமாக பெற்றார், தங்கம் தனிகணக்கு

நவாப் பதவிஏற்பு விழாவில் முகமதியன் போலவே உடையணிந்து நின்றான் டூப்ளே

அதாவது அவன் சொல்லாமல் சொன்னது நானே ஆட்சியாளன்

அந்த விழா கிட்டதட்ட வளர்ப்புமகன் திருமணம் போல நடந்தது, புதுச்சேரி விழாகோலம் பூண்டது, எல்லா மாதா கோவில்களும் திருப்பலிகளால் நிரம்பின‌

மகாராஜாவிற்கு ஒப்பான அந்தஸ்தை பெற்றான் டூப்ளே, அவன் கீர்த்தி உலகெங்கும் பரவிற்று

தன் வெற்றிக்கு அடையாளமாக ஒரு தூணை நட்டு தன் சிலையினையும் நிறுவி ஒரு ஊரையும் ஆம்பூர் அருகே உருவாக்கினான், அதன் பெயர் “டூப்ளே பாதியாபாத்” அதாவது டூப்ளே வெற்றியின் அடையாளம்

டூப்ளே சொன்னபடி ஆடினார் ஆற்காடு நவாபும், ஐதரபாத் நிஜாமும், அவன் சொன்னது சட்டமாயிற்று அவனே ஆட்டி வைத்தான்

ஐரோப்பியன் ஒருவன் இந்திய அரசை தன் கட்டுபாட்டில் வைத்திருகின்றான் என பிரான்ஸை ஐரோப்பிய நாடுகள் மரியாதையாய் பார்த்தன‌

டூப்ளேவோ இதெல்லாம் தூசு, பரந்த இந்தியாவினையும் பிரான்ஸ கட்டுபாட்டில் கொண்டுவரும் காலம் வரும் என சொல்லி சிரித்துகொண்டிருந்தான்

இப்படியே 4 ஆண்டுகள் போயிற்று, மாமன்னன் நிலையினை எட்டி இருந்தான் டுப்ளே, இதற்கிடையில் நிஜாம் முபர்சிங் மர்மமான முறையில் சாக அவன் மகன் சல்பத் சங் என்பவரை நிஜாமாக்கி தடையின்றி ஆண்டான் டூப்ளே

ஆங்கிலேயரோ ம்ம் அவனுக்கு யோகம், நாம் நம் வேலையினை பார்ப்போம் என சென்னை கோட்டையில் அடைந்து கிடந்து வியாபாரம் பார்த்தனர், பிரான்சின் நிலையினை இந்தியாவில் நாம் நெருங்கவே முடியாது என அவர்களே சொல்லிகொண்டனர்

இந்நிலையில் சாந்தா சாகிப்பிற்கு முகமது அலி உறுத்திகொண்ட இருந்தான், அவனை முடித்துவிடுவது என முடிவெடுத்த சாந்தாசாகிப் தன் படை மற்றும் டுப்ளே உதவியுடன் திருச்சிக்கு சென்றான்

அன்றைய காவேரி இன்றுபோல் பொங்கி வந்தது, நடுவில் மலைகோட்டை மிகுந்த அரண்மிகுந்ததாய் இருந்தது அதில்தான் முகமது அலி இருந்தார்

திருச்சியினை முற்றுகையிட்டு முகமது அலியினை வீழ்த்த போராடிகொண்டிருந்தது சாந்தா சாகிப் மற்றும் டூப்ளே படை

இந்நிலையில் பிரிட்டானிய முகாம் அழுதுகொண்டிருந்தது, சென்னை பக்கம் அவர்களுக்கு மரியாதையே இல்லை, டூப்ளே சென்னை கோட்டையில் பிரெஞ்ச் கொடி பறக்கவிட்டதையும் இவர்களை விலங்கிட்டு அழைத்து சென்றதையும் கண்ட மக்கள் பிரிட்டானியரை கொஞ்சமும் மதிக்கவில்லை

ஆனால் தங்களால் தடுக்கமுடியாத அளவு பிரான்ஸ்படை வெற்றிமேல் வெற்றிபெறுவதை நினைத்து அழுதார்களே தவிர என்ன செய்வது என தெரியவில்லை

அவர்களின் தளபதி லாரன்ஸ் அப்பொழுது லண்டன் சென்றிருந்தார்

திருச்சி சாந்தாசாகிப்பிடம் விழும்பட்சத்தில் டூப்ளே இன்னும் வளருவான் என வருந்திய ஆங்கிலேயர் கையறு நிலையில் இருந்தனர்

விஷயம் கேள்விபட்டு அவர்கள் முன் வந்து நின்றான் கிளைவ்

எனக்கு கொஞ்சம் வீரர்களை கொடுங்கள், டூப்ளேயினை நான் வென்றுகாட்டுகின்றேன் என்றான்

ஆங்கிலேயர் நம்பவில்லை ஆனால் வேறுவழியுமில்லை

“சரி உனக்கு படை தருகின்றோம், உன் திட்டம் என்ன என சொல் , இந்த சிறுபடையோடு திருச்சி என்று சண்டைபிடிப்பாயா? நாம் அவர்கள் முன்னால் நிற்க முடியுமா?”

கிளைவ் தீர்க்கமாக சொன்னான், திருச்சிக்கா? அங்கு எதற்கு?

பின் எங்கே செல்வாய்?

சாந்தாசாகிப் மமதையில் ஆற்காடு எனும் அவர்கள் தலைநகரத்தை விட்டு திருச்சி பக்கம் சென்றிருக்கின்றான், நான் ஆற்காட்டை பிடிக்க போகின்றேன், இந்த சிறுபடையால் பாதுகாப்பில்லா ஆற்காட்டை பிடித்துவிடுவேன்

அவனின் நுட்பமான திட்டத்தை ஆச்சரியமாக பார்த்த மேலிடம் அவனிடம் அடுத்த கேள்வியினை கேட்டது

சரி பிடித்த கோட்டையினை எப்படி தக்கவைப்பாய், அவர்கள் யானை படையே பல ஆயிரம் உண்டு (60 ஆயிரமாக இருக்குமோ) உன்னை சிதறடித்துவிடுவார்கள் அத்தோடு சென்னை கோட்டையும் காலி

கிளைவ் சொன்னான், “நம்மிடம் சிறிய படை இருப்பது நமகு தெரியுமே அன்றி திருச்சியிலிருந்து வரும் சாந்தா சாகிப்பிற்கு எப்படி தெரியும்?

முதலில் கோட்டையினை கைபற்றி உள்ளே இருந்துகொண்டோம் என்றால் நம் பலம் அவனுக்கு தெரியாது, சிறியபடை கோட்டையினை கைபற்றி இருக்கும் என நிச்சயம் நினைக்கமாட்டான்

கோட்டைக்குள் இருந்தபடி போராடலாம்”

இதுதான் கிளைவ், தன் பலவீனத்தை எதிரிக்கு தெரியவிடாமல் அடிக்கும் வித்தை அவனுக்கு இருந்தது

வேறு வழியின்றி வாழ்வா சாவா நிலையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி கிளைவிற்கு இருநூறு ஆங்கில வீரர்களும் 300 இந்திய வீரர்களும் கொண்ட மிக சிறிய படையோடு ஆற்காடு நோக்கி சென்றான் கிளைவ்

திருச்சி பக்கம் 30 ஆயிரம் பேர் கொண்ட சாந்தாசாகிப் படை, 5 ஆயிரம் பேர் கொண்ட பிரெஞ்ச் படை இதுபோக நவாப் படை என கிளைவின் படையினை விட 100 மடங்கு பெரிதான படை நின்றது

முறையாக பயிற்சிபெறாத கிளைவ், அவ்வளவாக‌ யுத்தம் தெரியாத 500 பேருடன் பெரும் மனோதிடத்துடன்ஆற்காட்டை நெருங்கினான்

மிக பெரும் ஆச்சரியங்கள் அங்கு நிகழ இருந்தன‌.

தொடரும்..