கீதையின் எட்டாம் அத்தியயாம்.

Image may contain: 2 people, people standing

கீதையின் எட்டாம் அத்தியயாம் அஷ்சர பிரம்ம யோகம்

அஷரம் என்றால் அழியாத அல்லது மாற்றமுடியாத என எனபொருள் , அழியாத பிரம்ம யோகத்தை பற்றி சொல்ல்லும் பகுதி இது

அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? கர்மமென்பது யாது? பூதஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை? யாக ஞானம் என்பதென்ன?

யாக ஞானம் என்பதென்ன? தம்மைத் தாமே உணர்ந்தவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவது எப்படி?

கண்ணன் தெளிவாக விளக்குகின்றான், “அர்ஜூனா அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.

அழிவுபடும் இயற்கையைக் உலக வாழ்வை குறித்தது பூதஞானம். தெய்வத்தை பற்றியது தேவஞானம். வழிபாட்டில் என்னை உணர்வது யாகம்.

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான், இதில் ஐயமில்லை.

ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பனாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.

ஆதலால் எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.

வேறு சிந்தனையின்றி யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரமனை அடைகிறான்.

ஆண்டவனை , அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை, எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கிறானோ;. இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ, அவன் அந்தக் கடவுளாகிய பரமனை அடைகிறான்.

அர்ஜூனா, எது அழிவற்றது தெரியுமா? எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர் தெரியுமா?, விருப்பமற்ற முனிகள் எதனுள் நுழைவார்கள் தெரியுமா? எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்…

எல்லா வாயில்களையும் (புலன்களையும்) நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதிபெற்று, “ஓ” என்ற பிரம்ம எழுத்தை ஒன்றையே ஜபித்துக் கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகின்றான்.

நித்திய யோகத் நினைந்து , வேறு நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன். என்னை யடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறுபிறப்பை அடையமாட்டார்.

அர்ஜுனா! பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை. பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. இதை யறிந்தோரே இராப்பகலின் இயல்பறிவார்.

‘அவ்யக்தம்’, அதாவது மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. *இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்து விடுகின்றன. இந்த பூதத் தொகுதி ஆகியாகித் தன் வசமின்றியே * இரவு வந்தவுடன் அழிகிறது; பார்த்தா! *பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.

அவ்யக்தத்தினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது.

அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தியபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா! அந்தப் பரமபுருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.

யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.

தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தையடைகிறார்கள்.

புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.

உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந்தருவது.

இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுனா, எப்போதும் யோகத்தில் கலந்திரு.

இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்..”

இதுதான் அஷர பிரம்ம யோகம்

இன்னும் அழுத்தமாக சொன்னால் மரணத்துக்கு அப்பாற்பட்ட நிலையினை சொல்லும் அத்தியாயம் இது

இந்த இடத்தில் உங்களுக்கொரு சந்தேகம் எழலாம், இங்கே எமலோகமில்லை சித்திர குப்தனில்லை கணக்கு இல்லை

அப்படியானால் நசிகேதன் கதை பொய்யா, கருடபுராணம் என்பதெல்லாம் பொய்யா? அவை எல்லாம் தேவையற்று சொன்னார்களா? என சந்தேகம் எழலாம்

இந்த அத்தியாயம் அவை இல்லை என சொல்லவில்லை மாறாக யோகிகளுக்கு என்னாகும் என்பதை சொல்கின்றது, மூடர்களுக்கோ பஞ்சமா பாதகங்களுக்கோ என்னாகும் என்பது பற்றி சொல்லவில்லை அவற்றுக்கான தண்டனை வேறு

இன்னும் ஆழமாக நோக்கினால் ஞானம் பெற்று கடவுளின் சிந்தனை வரும் வரை மறுபடி மறுபடி பிறக்க வேண்டும், பிறந்து இனம்புரியா சித்திரவதைகளை மானிட வாழ்வில் அனுபவிக்க வேண்டும்

அதுதான் நரகம்

அர்ஜூனன் பிரம்மம், ஆத்மம், கர்மம் உட்பட எல்லாவற்றுக்கும் விளக்கம் கேட்க கேட்க கண்ணன் அதற்கான விளக்கத்தை அழகாக சொல்கின்றான்

இந்த அத்தியாயத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான், பிரம்மலோகம் என்பது சில உலகங்களை உள்ளடக்கியது, நல்லவனோ கெட்டவனோ அதை கடந்து போக முடியாது மறுபடி மறுபடி பிறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்

ஆனால் பரம்பொருளை நினைத்து அவர் சரணடியினை புகுந்தவர் மறுபடி பிறக்க வேண்டாம், பிரம்மலோகத்தை தாண்டிய வைகுண்டத்தை அவர் அடைந்து அந்த ஆத்மா பிறப்பில்லா தன்மையினை அடைகின்றது

பிரம்மலோகத்தில் சுற்றும் ஆத்மாக்கள் கர்ம பலனுக்கு ஏற்ப மறுபடி மறுபடி பிறந்து கொண்டே இருக்கும்

இந்த பிரம்மலோகம் என்பதையும் கொஞ்சம் கவனிக்கலாம், பிரம்மலோத்துக்கு மானிடரின் ஆயிரம் யுகம் என்பது ஒரு நாளை போல் கடக்கின்றது

(பைபிளில் தாவீதின் சங்கீதம் இதை சொல்லும், இயேசுவுக்கு முந்தைய காலத்தில் பாடபட்ட பாடலில் பூமியின் ஆயிரம் வருடம் கடவுளுக்கு ஒரு நாள் போல கழியும் என்க்கின்றது, ஆக அப்படி ஒரு நம்பிக்கை யூதரிடம் இருந்திருக்கின்றது

கீதையிலிருந்து யூதர் எடுத்த விஷயம் இது)

பிரம்மலோகத்துக்கு உட்பட்ட எல்லாம் அழிவுறும், அதற்கு அப்பக்கம் இருக்கும் இடம் தோற்றமும் முடிவும் இல்லா பரம்பொருளின் உலகம் அது அழிவதில்லை என்கின்றது இந்த அத்தியாயம்

விஞ்ஞானம் என்ன சொல்கின்றது?

இந்த பிரபஞ்சம் ஒரு நாள் அழியும், நம் சூரியன் கூட 500 கோடி வருடத்தில் அழியலாம். வானில் ஒவ்வொரு நாளும் ஏகபட்ட நட்சத்திரங்கள் அழியும் , புது நட்சத்திரம் பிறக்கும்

இந்த பிரபஞ்சம் அழியும் சூரிய சந்திர வான மண்டலமே பூமியோடு அழியும், பின் பிரபம்ஞ்சம் உதிக்கும் அப்பொழுது எல்லாமும் தோன்றும் உயிர்களும் தோன்றும் என்கின்றது விஞ்ஞானம்

இதைத்தான் கீதை தெளிவாக சொல்கின்றது

இந்த அத்தியாயம் ஒரு மனிதன் எந்நேரமும் மரணத்துக்கு தயாராக அதாவது கடவுளின் நினைப்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்கின்றது, மரணம் என்பது நொடியில் வரலாம், எதிர்பாராமல் வரலாம் அதனால் ஒவ்வொரு நிமிடமும் கடவுளை உள்நிறுத்தி அவரில் கலக்க தயாராக இருத்தல் வேண்டும்

அப்படி இல்லையெனில் அவன் ஆத்மா பின்னாளில் மாபெரும் சிக்கலை சந்திக்கும், அது நிம்மதியின்றி மறுபடி லவுகீக வாழ்வில் சுழலும்

எதிர்பாரா மரணம் கிடைக்கா வரம் பெற்றவனும் தன் மரணபடுக்கையில் பரம்பொருளை நினைத்தல் வேண்டும்

(கீதையின் இந்த வாக்கியமே பைபிளில் குறிப்பாக இயேசுவின் வாழ்வில் சொல்லபடுகின்றது, நான் விரைவில் வருவேன் எல்லோரும் தயாராக எந்நேரமும் இருங்கள் என இயெசு குறிப்பால் சொல்வது இதுதான்

ஆம் வாழும் பொழுதே எந்நேரமும் கடவுளில் கலந்து மரணம் எப்பொழுது நடந்தாலும் பரம்பொருளில் கலக்க அவன் தயாராக இருத்தல் வேண்டும், இதைத்தான் கிறிஸ்துவம் சொல்கின்றது

ஆனால் இயேசு வருவார் வந்து மற்ற மக்களை அழவைத்து எங்களை மட்டும் மோட்சத்துக்கு அழைத்து செல்வார் என வெறியோடு காத்திருக்கின்றது கிறிஸ்தவ கோஷ்டி

தீர்ப்புநாள்,இரண்டாம் வருகை என கிறிஸ்தவம் குழப்பும் எல்லாமும் இந்த அத்தியாயமே

ஆம் கீதை வாழும் பொழுதே கடவுளை தேடு தயாராக இரு, சாகும் நிலையிலாவது கடவுளை தேடு என என்றோ சொல்லிவிட்டது

அதை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு பிரதியெடுத்து சொன்னவர் இயேசு

அதை இருநூறு ஆண்டுக்கு முன்பு இங்கு வந்து “அல்லேலூயா” மனம் திரும்புங்கள், மன்னிப்பு கேளுங்கள், இயேசு வருகின்றார் என நமக்கே சொல்கின்றார்கள் இவர்கள்

எப்படிபட்ட மடத்தனம் இது? பைத்தியகார தனம் இது? எல்லாம் கீதையினை இச்சமூகம் ஒழுங்காக படிக்காமல் போன பாவமே அன்றி வேறல்ல‌

கிறிஸ்தவம் பாவத்துக்கு மன்னிப்பு கேள், சாகும்பொழுது பாவமன்னிப்பு வாங்கு, கடவுளை உணர்ந்து நல்லவனக சாவு என்பதை என்றோ சொன்னதுதான் இந்த எட்டாம் அத்தியாயம்)

இந்த அத்தியாயத்தில் மறைமுகமான வரி ஒன்று உண்டு அதை அர்த்தம் மாற்றி புரிதல் வேண்டும்

வெளிச்சம், பகல், தீபம், வளர்பிறை முதல் ஆறுமாதம் இம்மாதிரி நேரம் சாகும் யோகி என்னை அடைகின்றான். புகை, இரவு, இருட்டு தேய்பிறை கடைசி ஆறுமாதத்தில் இறப்பவன் சொர்க்கம் அடையமுடியாது

இதை அப்படியே எடுக்காமல் கொஞ்சம் உள் உண்மையினை புரிதல் வேண்டும். அதாவது ஞான வெளிச்சம் பெற்று அதிலே வளரும் யோகி வளர்ந்து கொண்டிருக்கும் பொழுதே செத்தால் என்னை அடைவான்

ஆனால் புகை போல தெளிவற்றும் இருட்டு போல அஞ்ஞானத்திலும் குழம்பும் யோகி என்னை அடையமாட்டான் அவன் மறுபடி பிறந்து ஞானம் பெற்று வருவான்

மிக மிக சிலாகிக்க கூடிய வரி “அர்ஜூனா ஒருவன் வாழ்வின் கடைசி கட்டத்திலும் என்னை நினைத்தாலும் நான் அவனுக்கு மோட்சம் அருள்வேன்”

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இது பல லட்சம் காலங்களுக்கு முன்பு, ஏன் காலமே தெரியா அளவு பழமையான கீதையின் வரி

ஆனால் இரண்டாயிரம் வருடத்து முன்பு ஒரு திருடன் இயேசு எனும் மகானோடு சிலுவையில் அறைபடுகின்றான், இயேசுவின் அருகில் தொங்கி தன் வாழ்வின் கடைசி நொடிகளில் இருக்கும் அவன் கடவுளை உணர்ந்து பாவத்தை உணர்ந்து அந்த மகானிடம் மன்னிப்பு கேட்கின்றான்

மிக கொடியவனான அந்த திருடன் கடைசி நொடியில் திருந்தியதால் அவனை சொர்க்கத்துக்கு அழைத்து செல்வதாக சொல்கின்றார் மகான் இயேசு நாதர்

ஆம் கடைசி நேரத்தில் திருந்தி கடவுளை தேடினாலுன் சொர்க்கம் உண்டு என்பதை முதலில் சொன்னது கீதை

அந்த கண்ணனின் வார்த்தையினையே அடிப்படையாக வைத்து மகான்கள் வந்தார்கள் அவன் சொன்னபடி வாழ்ந்தார்கள், கண்ணனின் வார்த்தைகள் கண்ணனின் கீதை அவர்கள் மூலம் நிறைவேறிற்று

புத்தனோ இயேசுவோ யாரோ எல்லா மகான்களின் வாழ்விலும் கீதையின் தத்துவம் இருக்கும்

இதைத்தான் “அரஜூனா ஞானியரின் ஞானம் ஞானே” என எக்காலமும் நிலைக்குமாறு சொன்னான் கண்ணன், அதை இந்த அத்யாயம் அழுத்தி சொல்கின்றது

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..