குஜராத் முடிவுகள்
குஜராத்தில் காங்கிரஸ் வெற்றியினை தவற விட்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு
ஒன்று ராகுல் தாமதமாக தலைவராக அறிவிக்கபட்டது. அவரை தலைவராக்கிவிட்டே தேர்தல் களத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்
இரண்டாவது காரணமே மகா முக்கியமானது, அதாவது தங்க தலைவி குஷ்பு அங்கு பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. அதனால் ஏற்பட்ட இழப்பு இது
இனியாவது தலைவியினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கி காங்கிரஸ் வெற்றிபாதையில் செல்லட்டும்
குஜராத்தில் வென்றால் சென்னையில் பாஜகவினர் லட்டு கொடுக்கின்றார்கள், தமிழகத்தில் அவர்கள் வெற்றி சாத்தியமே இல்லை என்பதால் இப்படி மகிழ்கின்றார்கள்
தேசிய கட்சி இப்படி சென்னையில் லட்டு கொடுக்கும் கட்சியாகிவிட்டது
இப்பொழுது எதற்கு லட்டு கொடுக்க வேண்டும்?
இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட தேசிய கட்சிதான் என பெயரிடபட்டிருக்கின்றது, என்றாவது சென்னையில் வென்றதற்கு டெல்லி, மும்பை, கல்கத்தா என லட்டு கொடுத்து மகிழ்ந்திருக்கின்றார்களா?
இல்லவே இல்லை
அவ்வளவிற்கு மிக மிக தன்னடக்கமான தேசிய கட்சி அ.இ.அதிமுக