குடியுரிமை சட்டதிருத்தம் மிக சரியாக பலனளிக்க தொடங்கியிருக்கின்றது
அசாமில் இந்திய ராணுவ வீரனுக்கே குடியுரிமை இல்லை : உபிக்கள் சோகம்
உபிக்களுக்கு அறிவு கிடையாது அவை அப்படித்தான் அரசியலுக்கு அழும்
நாம் பல கோணங்களில் விஷயத்தை கவனிக்கலாம்
ஆம் சிரியாவின் ராணுவ ஆலோசகராக இருந்தான் எலிகோஹன், அவன் இஸ்ரேலி உளவாளி என தெரியவே 20 ஆண்டுகள் ஆனது
அந்த யூதன் சிரிய குடியுரிமைபெற்று சிரிய ராணுவத்தில் ஊடுருவினான்
இந்தியாவின் ரவிந்திர கவுசிக் பாகிஸ்தானில் புகுந்து குடியுரிமை பெற்று பாகிஸ்தான் ராணுவத்திலே ஊடுருவினான்
ஆக இந்தியாவில் இந்திய குடியுரிமை இல்லாமலே ஒருவனால் ராணுவத்தில் புக முடிந்திருகின்றது
வங்கதேசத்தவர் மேற்கு வங்க போலி குடியுரிமை பெற்று இங்கு ஊடுருவலாம், வடகிழக்கு மங்கோலிய சாய இந்தியரில் சீனன் ஊடுருவலாம்
பாதுகாப்பு விஷயத்தில் எல்லா விஷயமும் சந்தேகத்துகுரியதே
அகதிகள் மூலமோ இல்லை ஒரு நாட்டில் இருக்கும் பலவீனங்கள் மூலமோ உளவு அமைப்புகள் எதிரி நாட்டின் அதிகார பீடம் வரை ஊடுருவது உலகில் ஒன்றும் புதிதல்ல
இப்பொழுதுதான் விஷயம் கசிகின்றது, இன்னும் யாரெல்லாம் தகுந்த குடியுரிமை இன்றி எந்தெந்த பதவியில் இருந்தான் என்பது இனி தெரியவரும்
குடியுரிமை சட்டதிருத்தம் மிக சரியாக பலனளிக்க தொடங்கியிருக்கின்றது,
மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்