குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம்
குடியேற்ற கொள்கைக்கு எதிராக திமுக இன்று போராட்டம்
அன்று பர்மா தமிழர்களை, அதாவது இந்தியர்களை வெளியேற்றிய பர்மா அரசினை எதிர்த்து போராட்டம் , இன்று பர்மா மக்களை வெளியேற்றும் இந்திய அரசை எதிர்த்தும் போராட்டம்
ஏதாவது புரிகின்றதா? புரியாது
அன்று அமைதிபடையினை இலங்கையில் இருந்து வரசொல்லி போராட்டம் அமைதி படையினை மீட்டு ஈழ அகதிகளை அனுப்பவேண்டும் என போராட்டம், இன்று ஈழ அகதிகளை திரும்ப அனுப்பமாட்டோம் என போராட்டம்
இதுவும் ஏதாவது புரியுமா? புரியாது
ஈழதமிழரை விரட்டிய சிங்களனை எதிர்த்தும் போராட்டம், ஈழதமிழரை திருப்பி அனுப்பும் இந்திய அரசை எதிர்த்தும் போராட்டம்
இதுவும் ஏதாவது புரியுமா? புரியாது
தமிழகம் தமிழருக்கே என்பார்கள். சரி அசாம் அசாமியருக்கே, வங்க தேசம் வங்க மக்களுக்கே என்பதுதானே சரி என்றால் இல்லை இல்லை வங்கத்தவர் இந்தியாவில் எங்கும் இருக்கலாம் என்பார்கள்
வங்க மக்கள் வந்தால் இந்தியாவில் ரேஷன் கொடுக்க வேண்டுமே என்றால் தாரளமாய் கொடுக்கலாம் என்பார்கள்
நீங்கள்தானே பொது ரேஷன் விநியோகத்தை ஒரே ரேஷன் கார்டு முறையினை எதிர்த்து? என கேட்டால் சத்தமே வராது
மகா மகா குழப்பத்தின் மறுபெயர் திமுக
அந்த மகா குழப்பமான கட்சியின் மிகபெரும் குழப்பமான தலைவர் முக ஸ்டாலின்