குதர்க்க வழியில் எதிர்கொள்வது திமுகவினருக்கு கை வந்த கலை..

கடைசிகால திமுக ஆட்சி மைனாரிட்டியாக காங்கிரஸ் ஆதரவில் நடந்தது, மத்தியில் வசமாக பதவியினை வாங்கிய கருணாநிதி, மாநிலத்தில் காங்கிரசுக்கான மந்திரிபதவியினை கொடுக்க மறுத்தார்

அவரின் சாதுர்யம் அது, சோனியா என்பவருக்கு ஒரு காலமும் காங்கிரஸ் முக்கியமில்லை தேசமும் முக்கியமில்லை என்பதால் அவரும் ஒன்றும் சொல்லவில்லை

இதனால் சொக்கதங்கம் சோனியா என திமுகவினருக்கு இனிப்பான தலைவரானார்

ஜெயா இதை குறிவைத்து மைனாரிட்டி திமுக என்றபொழுது திமுகவினர் என்ன சொன்னார்கள் தெரியுமா?

“திருமதி ஜெயலலிதா?”

இதெல்லாம் ஏற்றுகொள்ள கூடிய பதிலா? அரசியல் வாதத்தை அரசியல் வாதத்தால் பதில் சொல்லமுடியாதா?

அரசியலை அரசியலால் எதிர்கொள்ளாமல் குறுக்குவழி குதர்க்க வழியில் எதிர்கொள்வது திமுகவினருக்கு கை வந்த கலை..