குதிராம் போஸ்
மிக சிறிய வயதிலே போராட வந்ததாக சொல்லி தனக்கும் தன் 70 தலைமுறைக்கும் சேர்த்துவிட்ட தமிழக திராவிட அரசியல்வாதிகளைத்தான் பலருக்கு தெரியும்
மிக சிறிய வயதில் இந்தியாவுக்கு போராட வந்து நாட்டுக்காய் செத்த பலரை நமக்கு தெரியாது
கவனியுங்கள், ஏழையாக செத்த ஒரு திராவிட தலைவனையும் நீங்கள் பார்க்கவே முடியாது, ஆனால் வரும்போது வெற்றுகையோடுதான் வருவார்கள்
பிச்சைக்காரனாவது ஒரு திருவோடு ஏந்தி தெருவில் வருவான் அதுவுமில்லாமல் வந்து தெருவினையே வாங்குபவர்கள் திராவிட கோஷ்டிகள்
அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்தியாவில் பக்த்சிங்குக்கு ஒரு முன்னோடி இருந்தான் அவன் பெயர் குதிராம் போஸ், வங்கத்துக்காரன்
ஒன்றுபட்ட இந்தியாவில் வங்கத்தில் சுதந்திர உணர்ச்சி பொங்கிய 1900களில் அவனுக்கு வயது 11. அந்த வயதிலே போராட வந்தான், வங்க பிரிவினை இந்தியாவினை கொந்தளிக்க வைத்தது
வங்க பிரிவினைக்கு காரணம் லார்டு கர்சன், 1905ல் அவனின் திட்டம் இந்துக்களையும் இஸ்லாமியரையும் பிரிப்பது, அவன் போட்டே கோடே பின் கிழக்கு பாகிஸ்தானும் பின்னாளில் வங்க தேசமும் உருவாக காரணமாயிற்று
அந்த பிரிவினையினை எதிர்த்து நின்றவன் குதிராம் போஸ்
அதுவரை வங்கத்தில் ஆயுத வழி இல்லை , முதன் முதலில் வெள்ளையனின் காவல் நிலையங்களை ஒரு குழு தாக்க ஆரம்பித்தது. காவல் நிலையங்கள் செயல்பட அஞ்சின, வெள்ளை அரசு ஆடிபோனது
ஏகபட்ட காவல்நிலையம் நொறுக்கபட்டது, போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறையினை ஒடுக்க கடும் முயற்சி நடந்தது
3 வருட போராட்டத்துக்கு பின் அந்த காவல் நிலைய தகர்ப்பு போராளிகளை பிடித்த பிரிட்டிஷ் காவல்துறை அதிர்ந்தது ஆம் அந்த தலைவனுக்கு வயது வெறும் 16
ஆம் 15 வயதிலே ஆங்கிலேயரை அலற வைத்தவன் அவன், அவன் வழியில்தான் பின் பகத்சிங்கும் நேதாஜியும் வந்தார்கள்
குதிராம் போஸுக்காக வங்கமே திரள்வதை அறிந்த அரசு அவனை 18 வயதிலே தூக்கிலிட்டது
மிக சிறிய வயதிலே போராட வந்து, மிக சிறிய வயதிலே அவன் முடிந்தும் விட்டாலும் அந்த தீக்குச்சி இங்கு ஏற்றிய போராட்ட தீயே பின்பு விடுதலையாய் முடிந்தது
அவன் மைனர் என்பதால் அவனை விடுவிக்க சட்டத்தில் இடமிருந்தது, அவனின் தாய் போராடினாள், ஆனால் அச்சிறு வயதிலே நாட்டுக்கு சாக தயாராக இருப்பதாகவும் இந்நாட்டின் ஏகபட்ட மகன்கள் அவளை கவனிப்பார்கள் எனவும் சொல்லிவிட்டு சென்றான் அந்த போஸ்
இந்திய விடுதலைவரலாற்றில் மிக மிக குறிப்பிடதக்கவன் குதிராம் போஸ்
அவனை தூக்கிலிட்டபின்பே இனி பொறுப்பதில்லை என தேசம் பொங்கி எழுந்தது, வெள்ளையன் தலைநகரை டெல்லிக்கு மாற்றியதே இந்த வங்க கொதிப்பில்தான்
நாட்டின் தலைநகரை மட்டும் அல்ல, தேசத்தின் தலைவிதியினையே மாற்றியவன் அவன்
அந்த வீரமகனுக்கு இன்று பிறந்தநாள் நாள்
இன்று அவனின் ஊரும் அவனின் நினைவிடமும் வங்கதேசத்தில் இருந்தாலும் அவன் இந்நாட்டவனே, இந்த மக்களுக்காக உயிர்துறந்தவனே
அவனுக்கு வீரவணக்கம், இந்தியா உள்ள காலமட்டும் அவனும் நிலைத்திருப்பான்.
ஒன்றா இரண்டா இந்நாட்டின் தியாக பிம்பங்கள்?
தண்ணீர்விட்டா வளர்த்தோம் சர்வேஸ்வரா……

