குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 58

“இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே – அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளிர்ந்துங் கொலும்”

நல்லவர்கள் கடுமையான சொல்லை சொன்னாலும் அது நன்மையான விஷயங்களை கொடுக்கும் நல்ல விளைவுகளை தரும், பொல்லாதோர் இனிமையாக பேசினாலும் அந்த விளைவுகள் மிகபெரிய கெடுதலை கொடுக்கும்.

வெங்காயம் உடலுக்கு சூடு என்றாலும் நன்மை பயக்கும், விஷம் உடலுக்கு குளிர்ச்சியினை கொடுத்தாலும் அது உயிரை எடுத்துவிடும்

நல்லோரின் கோபம் நல்ல விளைவுகளை தரும், நயவஞ்சகரின் போலி கருணை பெரும் துன்பத்தை கொடுக்கும் என்பது பாடலின் பொருளாகும்..