குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 67
“ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல்
ஓஒ கொடிது கொடிதம்மா – நாகொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற்
றாவா விவரென்செய் வார்”
தன்னால் பிறருக்கு ஈகை செய்ய முடியா நிலை இருந்தால் கூட இன்சொல் சொல்லலாம், அந்த இன்சொல்லை கூட சொல்லாமல் விரட்டுவது பெரும் கொடுமையிலும் கொடுமை, நாக்கிலே பூட்டு போட்டு கொண்ட கொல்லனிடம் மேற்கொண்டு என்ன பேசிபெற முடியும்?
ஈகை செய்ய முடியா நிலையில் இன்சொல்லாவது பேச வேண்டும் அது புண்ணியம் என்கின்றார் குமரகுருபரர்