குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 75
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 75
நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும்
செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் – முன்னைத்தம்
ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார்
தீய செயினுஞ் சில.
நாவில் நல்ல விஷயங்களை தழும்பாக இட்டு கொண்டவர்கள், அதாவது உயர்நெறிகளை மட்டும் போதிக்கும் பெரும் உத்தமர்கள் தங்கள் ஊழ்வினை காரணமாக சில கீழான விஷயங்களை செய்தாலும் மனம் வருந்துவர், அப்படி மனம் வருந்தி தங்கள் ஊழின் வலிமை குறித்து கலங்கி நிற்பர், இத்தகைய நல்லவர்கள் கீழான செயல்களை செய்தாலும் கீழ்மக்கள் என்றாக மாட்டார்கள் என்பது பாடலின் பொருள்
எக்காலமும் நன்மையே பேசி நல்லதையே செய்யும் பெருமக்கள் சில இடங்களில் கீழான செயல்களை செய்தால் அது அவர்களின் ஊழ்வினை அன்றி வேறல்ல என்பது பாடலின் பொருள்
மிகபெரிய உதாரணமாக மகாபாரத தர்மனை குறிப்பிடலாம், அவன் மிகபெரிய தர்வமான் அறவழி நடப்பவன், ஆனால் விதிவசத்தால் சூதாடி வீழ்ந்தான் என்பதால் அவன் கீழானவன் என கருதபடவே மாட்டான்
தர்மவான்கள் கீழான காரியங்களை செய்தால் அது அவர்களின் கர்மவினை தவிர வேறேதுமில்லை அதற்கு உரிய காரணங்களும் இருக்கும் , விதிபயனாக கீழான காரியங்களை செய்தால் அவர்கள் கீழான குணம் கொண்டவர்களாக ஆகிவிடமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்