குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 77
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 77
“கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
தருமமுந் தாழ்வு படாமே – பெரிதுந்தம்
இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார்
நன்னலந் துய்த்த னலம்”
தன் கடமை தவறாமல், தன் பெருமைக்கும் அறிவுக்கும், சிறிய மாசும் நேராமல் தன் அறநெறியில் வழுவாமல் தன் உடல் நலமும் கெடாமல் தன் அழகிய இளம்கொம்பு போன்ற மனைவியுடன் இன்பம் துய்ப்பது அறிவுடையார் செயல்
ஒருவன் தன் மனைவியுடன் எவ்வளவு இன்பமான வாழ்வையும் வாழலாம் ஆனால் அறிவுடையவர்கள் அந்த இன்ப வாழ்வு தன் கடமைக்கும், அறிவுக்கும், அறநெறிக்கும் குந்தகம் வராமல் தன் உடல்நலமும் கெடாமல் பார்த்து கொள்வார்கள்
மனைவியுடன் கூடிவாழும் வாழ்க்கை தங்கள் அறகடமைக்கும் அறிவுடமைக்கும் இடையூறு வராதபடி நல்ல அறிவுடையோர் கவனமாக காரியங்களை செய்வார்கள்.