குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 78

“கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ வேனையவுஞ் செய்வார் – பழியோடு
பாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார்”

காமவயபட்டவர்கள் என்னென்ன பாதகம் செய்வார்கள் என்பதை இந்த பாடலில் சொல்கின்றார் குமரகுருபரர்

காமகொடும்நோய் என்பது தான் பாதித்த ஒருவனை அடியோடு மாற்றும், அது கற்றவர் கல்லாதவர் என எல்லோரையும் அவரவர் தகுதிக்கு கீழாக இறக்கி நாயினும் கீழாக மாற்றும், குலம் குணம் செல்வம் புகழ் மரியாதை என எல்லாம் அழிக்கும்

அப்படிபட்ட காமம் என்னென்ன கொடுமைகளை செய்யும் என்றால் அந்த இன்பதுக்காக அதனால் அடிமையானவர்கள் கொலைக்கு அஞ்சமாட்டார், பொய் சொல்ல நாணமாட்டார், தன்மானத்தையும் பாதுகாக்க மாட்டார், திருட்டுத்தனமாக ஒருத்தியை அடைவார். அத்துடன் பெண் இன்பதுக்காக‌ எல்லா கொடுமைகளையும் செய்வார், பழியோ பாவமோ அவர் கண்களுக்கும் மனதுக்கும் தெரியாது