குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 87

“சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப – முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில்”

சிற்றின்பம் என்பது மிக மிக சிறிய காலமே இன்பம் கொடுக்கும் என்றாலும், சிறிய தொட்டியில் நீரா ஆடுதல் போல அதன் அளவு குறுகியதாயினும் அந்த சுகத்தில் மூழ்கியவர்கள் மற்ற எல்லா இன்பங்களையும் கைவிட்டு எல்லா சுகங்களையும் விட்டு அதனிலேயே மூழ்கியிருப்பர் அதை விட்டுவெளி வர விரும்ப மாட்டார்கள்

அப்படி மிக சில நொடிகளுக்கான இன்பத்தையே கைவிட விரும்பாத உலகில் பேரின்பமான சுகத்தில் பெருங்கடல் போன்ற இன்பத்தில் மூழ்கி கழிக்கும் இறை அடியார்கள் அந்த சுகத்தைவிட்டு வெளிவருவார்களோ? வரவே மாட்டார்கள் என்பது பொருள்

உலகில் உள்ள இன்பங்களெல்லாம் மிகசிறிய நேரமே இன்பம் கொடுக்கும் ஆனால் இறைவனின் பாதம் அடைந்து பெறும் இன்பம் முடிவில்லாதது என்பதால் அறிவுடையோர் உலக குறுகிய இன்பம் நாடாமல் பரம்பொருளின் பாதத்தையே நாடுவார்கள் என்கின்றார் குமர குருபரர்.