குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 24

“கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்
குற்றந் தமதே பிறிதன்று – முற்றுணர்ந்தும்
தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா
ஏதிலரை நோவ தெவ”

நன்கு கற்றவர்கள் கல்லாதவருக்கு எவ்வளவோ போதிப்பார்கள், தன்னிடம் படித்தவன் குற்றம்செய்தால் அது தன் குற்றமாக கருதி நாணுவார்கள். ஒருவனுக்கு போதிக்கும் முன் அவன் குணம் அறிந்து முழுவதும் சிந்தித்து பின் போதிக்கவேண்டும், அப்படி உணரமால் போதித்துவிட்டு அவரால் அவமானபட்டு வருந்துவதில் பலனேதுமில்லை

ஒருவனுக்கு போதிக்கும் முன் அவன் அந்த கல்விக்கும் போதனைக்கும் தகுதியானவனா என சோதித்துவிட்டுத்தான் போதிக்க வேண்டும் என்பது குமரகுருபரர் சொல்லும் தத்துவம்