குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 26
“குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற
“புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் – அறவோர்க்
கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம்
இலைமுகப் பைம்பூ ணிறை”
பாடலின் பொருள் மிக எளிமையானது
குலமகள் எனும் நல்ல குடும்ப பெண்ணுக்கு அறமும் தர்மமும் அறிந்தவளுக்கு கணவனே தெய்வம்.
பிள்ளைகளுக்கு தந்தையும் தாயும் தெய்வம்
அறம் செய்வோருக்கும் தர்ம காரியங்கள் செய்வோருக்கும் அவரை நாடி வரும் அடியார்களே தெய்வம்
நாட்டில் எல்லோருக்கும் பசும்பொன்னில் இலைபொன்ற வடிவமுடைய மாலைஅணிந்த அரசனே தெய்வம்
அதாவது மனைவி கணவனை மீறினாலும், தந்தை தாயினை பிள்ளைகள் மீறினாலும், அடியார்களை அறம் செய்வோர் புறக்கணித்தாலும், குடிகள் அரசன் கட்டளையினை மதியாமல் போனாலும் அந்த இடம் உருப்படாது மாறாக அவர்கள் சொல்வதை நன்மை என ஏற்றுகொண்டால் வாழலாம்
கணவன் தன் மனைவிக்கும், தாய்தந்தை தன் பிள்ளைகளுக்கும், அறம் செய்வோர் அடியாருக்கும், மன்னன் தன் குடிகளுக்கும் எக்காலமும் நன்மை ஒன்றையே சிந்திப்பார்கள் என்பது பாடலின் பொருள்