குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 34
“நட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையு மையுறுதல் – தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி”
தனக்கு நண்பர்களாக இருப்பவர்களை பிரித்துவிடுதல், பகைவருடன் நட்பு கொள்ளுதல், ஒற்றர்களை இகழ்ந்து ஒதுக்குதல், தன்னை சார்ந்த எல்லோர்மேலும் சந்தேகம் கொள்ளுதல், அறிவுடையர் ஆலோசனையினை புறக்கணித்தல் , கர்வம் கொள்ளுதல், அகங்காரம் கொண்டு செய்யதகாதன செய்தல் ஆகியவை ஒருவனுக்கு கேடுகாலம் வருவதற்கான அறிகுறிகள் என்பது பொருள்
எவனுக்கு கேடுகாலம் நெருங்குமோ அவனுக்கான அறிகுறிகள் எதுவென மேற்சொன்ன காரியங்களை சொல்கின்றார் குமரகுருபரர்