குமர குருபரர் நீதிநெறி : 03

“கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் – சொல்வளம்
மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும்
செல்வமு முண்டு சிலர்க்கு”

இப்பாடல் இப்படி பொருள்பட பிரியும்

“கல்வியே கற்புடை பெண்டிர பெண்டிர்ர்கு
செல்வம் புதல்வனே ஈர் அங்கு கவியாம் சொல்வளம்
மல்லல் வெறுக்கையாம் அவை மண்ணறுத்தும்
செல்வ்ம் உண்டு சிலர்க்கு

“கல்வியே ஒருவனுக்கு கற்புடை மனைவி என்றாகும், அந்த கற்புடை மனைவி ஈன்றேடுக்கும் மகன் போன்றது நல்ல பாடல்களும் செய்யுள்களுமான கவிகள், அந்த கவிதையின் சொல்வளமே சிறந்த செல்வமாம் (மல்லல் வெறுக்கை)

அந்த கல்விசெல்வம் அவனை அறிஞர் மிக்க அவையில் இரூக்க செய்யும், மண்ணில் சிறந்த செல்வத்தையும் கொடுக்கும்” என்பது பொருள்

குமரகுருபரர் மிக அழகான உவமையினை கையாள்கின்றார்

ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய செல்வங்களில் முக்கியமான செல்வம் நல்ல மனைவி, நல்ல மனைவிதான் நல்ல மகனை பெற்றெடுத்து வளர்ப்பாள் அதனால் அக்குடும்பம் மதிப்பும் மரியாதையும் பெறும்

நல்ல மனைவியும் நல்ல மகனும் பெறாதவன் வாழ்வு வீண், அவனுக்கு ஒரு காலமும் இழிவும் அவமானமும் தவிர ஏதும் மிஞ்ஞ்சாது.

அவ்வாறு நல்ல கல்விபெறாதவனுக்கும் அந்த கல்வியின் பலனாய் நல்ல விஷயங்களை சொல்லாதவனுக்கும் செய்யாதவனுக்கும் சமூகத்தில் மதிப்பே இல்லை, அவன் வாழ்வு வீண். கல்வி நன்மையும் உண்மையும் சத்தியமும் கொண்டதாய் இருக்க வேண்டும்

அந்த கல்வி நல்ல செயல்களை செய்யவைக்கும் , நல்ல சிந்தனைகளை பிறருக்கு தரும், அப்படிபட்டவன் அறிஞர்களில் ஒருவனாக கருதபட்டு அவனுக்கு பூமியின் செல்வமான பொருட்செல்வமும் கிடைக்கும்

கல்வி செல்வத்தை தேடினால் அது புகழும் அங்கீகாரமும் செல்வாக்கும் கொண்ட அவையினில் நிறுத்தும், அதனால் பொருட்செல்வம் தானாக வரும் என்பது குமரகுருபரர் சொல்லும் போதனையாகும்