குருநாணக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள்

இன்று அந்த மகான் குருநாணக்கின் 550ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடபடுகின்றது, சீக்கிய சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்இந்திய வரலாற்றில் குறிப்பிடதக்க அவதாரம் குருநாணக்நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், ஒரு நாகரீக சமூகத்தை பெருந்தன்மையான சமூகத்தை உருவாக்க துடித்திருக்கின்றான்அவனுக்கு தெரிந்த வரையில் சீக்கியம் எனும் அருமையான மதத்தை சமைத்துவிட்டு சென்றிருக்கின்றான்.அவனின் காலங்கள் கடுமையானவை, அடிக்கடி மோதல்களும் இன்னபிற அட்டகாசங்களும் நடந்தவை, வளமான பஞ்சாப் ஆப்கானியரின் வேட்டைகாடாயிற்றுகோரியில் தொடங்கி, தைமூர் நாதிர்ஷா என யார் யாரெல்லாமோ வந்தார்கள் அடித்தார்கள் கடைசியில் மொகலாயரிடமும் சிக்கினார்கள்அந்நிலையில்தான் குருநாணக் உதித்தார். புத்தம் இந்து இஸ்லாம் ஜெராஷ்டிரியம் என கலந்த மதமாக சீக்கிய மதத்தை ஸ்தாபித்தார். குழப்பத்திலும் அச்சத்திலும் இருந்த அம்மக்களுக்கு அவர் ஒரு தேவதூதனாய் தெரிந்தார்அவர் மதம் சமைத்தாரோ இல்லையோ பஞ்சாப் எனும் பூமி நம் தாய்பூமி எனும் கருத்தை பதிய வைத்துவிட்டு சென்றார்அவராலே இஸ்லாம் பூமிக்கும் இந்து பூமிக்கும் இடையில் ஒரு அரண் எழும்பிற்று, ஆப்கன் முதல் கல்கத்தா வரை பரவியிருந்த பேரரசை இடையில் வெட்டி சீக்கிய அரசு எழும்பிற்றுபஞ்சாபினை அது காத்து நின்றது, வெறும் விவசாய கூட்டம் போர்முறையில் அடித்து கலக்கியது எத்தனையோ ஆப்கானியரை அது ஓட விரட்டியதுகுரு கோவிந்த்சிங் போன்றவர்களை தொடர்ந்து மாமன்னன் ரஞ்சித்சிங் அதன் அசைக்கமுடியா அரசனாக இருந்தான்அந்த பஞ்சாப் ஒன்றுபட்டு இருந்தது லாகூர் அவர்களின் தலைநகராக இருந்தது, அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டினார்கள், குருநாணக் தன் கடைசி காலத்தை கர்தார்பூரில் கழித்தார்பிரிவினையின் பொழுது பஞ்சாப் இரண்டாக வெட்டபட்டு லாகூரும் கர்தார்பூரும் பாகிஸ்தானுக்கு சென்றதுநமக்கு அந்த சிக்கல் புரியாது, ஆனால் சீக்கியரின் வலி பெரிது இரு பக்கமும் உறவுகளும் ஆலயமும் உண்டு ஆனால் சந்திக்க விசா முதல் பயங்கர கெடுபிடிகள், அதுவும் இந்தியாவின் சந்தேக கண்ணும் பாகிஸ்தானிய சந்தேக கண்ணும் பெரும் இறுக்கம்இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இனமாக உள்ள அந்த இனத்தின் சோகமும் வலியும் பெரிதுஅந்த குருநாணக் ஏற்படுத்திய எழுச்சியே பஞ்சாப் தனி பூமி எனும் அடையாளத்தை கொடுத்தது, அதை பாதுகாக்கும் வீரத்தை கொடுத்ததுஇன்றும் அறிவுக்கும் கடும் உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் வீரத்துக்கும் பெயர் பெற்ற இனம் அது, சர்தாஜி ஜோக் எல்லாம் அவர்களின் பிம்பத்தை கலைக்க உருவாக்கபட்டவை அன்றி வேறல்ல‌வெள்ளையன் தான் செல்லுமிடமெல்லாம் தமிழனையும் சீக்கியனையும் அழைத்து சென்றான், இரண்டும் விசுவாசமாக கடும் உழைக்கும் இனமாக அவனுக்கு தெரிந்தது, ஆனால் தமிழன் இன்று மாறிவிட்டான் ஆனால் சீக்கிய இனம் பெரிதும் மாறவில்லைகாரணம் தமிழன் தன் மத அடையாளத்தை வரலாறை மறந்துவிட்டான். அவனுக்கு வந்த வழியும் தெரியாது செல்லும் வழியும் தெரியவில்லை, குருடனை போல் ஆகிவிட்டான்ஆனால் சீக்கியன் தான் ஒரு பஞ்சாபி எனும் வகையில் தன் அடையாளத்தை தொடர்ந்து பேணுகின்றான், சில மாறுதல்கள் வந்தாலும் அவனின் வேர் பஞ்சாபில் இருக்கின்றதுகனடா முதல் மலேசியா என ஏகபட்ட நாடுகளில் பெரும் வாழ்வு வாழ்கின்றனர் சீக்கியர்கள் ஆனால் மதம் வேறு வாழும் நாடு வேறு என்பதில் வலுகவனம்பிந்த்ரன் வாலே தனி காலிஸ்தான் கேட்ட காலங்களிலும் பொற்கோவில் சம்பவம் அதை தொடர்ந்த கலவரம் நடந்த கொடும் காலத்திலும் இந்தியாவோடு இருந்த சீக்கியரை மறக்கமுடியாதுஇன்றும் இந்திய ராணுவத்தை தாங்குபவர்கள் அவர்களேஇந்தியாவுக்கு கோதுமை முதல் பாசுமதி வரை வழங்கும் பூமி அதுதான்அந்த குருநாணக் வந்து பஞ்சாப் பக்கம் ஒரு புதிய சமூகத்தை தோற்றுவித்திராவிட்டால் இந்நேரம் பாகிஸ்தான் என்பது உபிவரை வந்திருக்கும்குருநாணக் ஏற்படுத்திய அந்த வழியும் அது வழி வந்த சமூகமே பாகிஸ்தானை சியால்கோட்டோடு நிறுத்திற்றுநம்புகின்றீர்களோ இல்லையோ ஒரு காலத்தில் பாகிஸ்தானில் இருக்கு பஞ்சாப் நம்முடன் வரும், லாகூர் நம் வசமாகும், அந்த அதிசயத்தை சீக்கிய இனம் ஒரு நாளில் நடத்தும்பெரும் தத்துவங்களுடனும் பசியாற்றும் கனிவுடனும் இன்னும் பெரும் பெரும் ஞானத்தினை எல்லாம் கொண்டும் எழும்பிய சீக்கிய மதத்தின் பிதாமகன் குருநாணக்கிற்கு ஞான வணக்கங்கள்