குருநாணக் என்பவரை அடிக்கடி நினைத்து பார்க்க வேண்டி இருக்கின்றது
அந்த குருநாணக் என்பவரை அடிக்கடி நினைத்து பார்க்க வேண்டி இருக்கின்றது
நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், ஒரு நாகரீக சமூகத்தை பெருந்தன்மையான சமூகத்தை உருவாக்க துடித்திருக்கின்றான்
அவனுக்கு தெரிந்த வரையில் சீக்கியம் எனும் அருமையான மதத்தை சமைத்துவிட்டு சென்றிருக்கின்றான்.
அவனின் காலங்கள் கடுமையானவை, அடிக்கடி மோதல்களும் இன்னபிற அட்டகாசங்களும் நடந்தவை, வளமான பஞ்சாப் ஆப்கானியரின் வேட்டைகாடாயிற்று
கோரியில் தொடங்கி, தைமூர் நாதிர்ஷா என யார் யாரெல்லாமோ வந்தார்கள் அடித்தார்கள் கடைசியில் மொகலாயரிடமும் சிக்கினார்கள்
அந்நிலையில்தான் குருநாணக் உதித்தார். புத்தம் இந்து இஸ்லாம் ஜெராஷ்டிரியம் என கலந்த மதமாக சீக்கிய மதத்தை ஸ்தாபித்தார். குழப்பத்திலும் அச்சத்திலும் இருந்த அம்மக்களுக்கு அவர் ஒரு தேவதூதனாய் தெரிந்தார்
அவர் மதம் சமைத்தாரோ இல்லையோ பஞ்சாப் எனும் பூமி நம் தாய்பூமி எனும் கருத்தை பதிய வைத்துவிட்டு சென்றார்
அவராலே இஸ்லாம் பூமிக்கும் இந்து பூமிக்கும் இடையில் ஒரு அரண் எழும்பிற்று, ஆப்கன் முதல் கல்கத்தா வரை பரவியிருந்த பேரரசை இடையில் வெட்டி சீக்கிய அரசு எழும்பிற்று
பஞ்சாபினை அது காத்து நின்றது, வெறும் விவசாய கூட்டம் போர்முறையில் அடித்து கலக்கியது எத்தனையோ ஆப்கானியரை அது ஓட விரட்டியது
குரு கோவிந்த்சிங் போன்றவர்களை தொடர்ந்து மாமன்னன் ரஞ்சித்சிங் அதன் அசைக்கமுடியா அரசனாக இருந்தான்
அந்த பஞ்சாப் ஒன்றுபட்டு இருந்தது லாகூர் அவர்களின் தலைநகராக இருந்தது, அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டினார்கள், குருநாணக் தன் கடைசி காலத்தை கர்தார்பூரில் கழித்தார்
பிரிவினையின் பொழுது பஞ்சாப் இரண்டாக வெட்டபட்டு லாகூரும் கர்தார்பூரும் பாகிஸ்தானுக்கு சென்றது
நமக்கு அந்த சிக்கல் புரியாது, ஆனால் சீக்கியரின் வலி பெரிது இரு பக்கமும் உறவுகளும் ஆலயமும் உண்டு ஆனால் சந்திக்க விசா முதல் பயங்கர கெடுபிடிகள், அதுவும் இந்தியாவின் சந்தேக கண்ணும் பாகிஸ்தானிய சந்தேக கண்ணும் பெரும் இறுக்கம்
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இனமாக உள்ள அந்த இனத்தின் சோகமும் வலியும் பெரிது
அந்த குருநாணக் ஏற்படுத்திய எழுச்சியே பஞ்சாப் தனி பூமி எனும் அடையாளத்தை கொடுத்தது, அதை பாதுகாக்கும் வீரத்தை கொடுத்தது
இன்றும் அறிவுக்கும் கடும் உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் வீரத்துக்கும் பெயர் பெற்ற இனம் அது, சர்தாஜி ஜோக் எல்லாம் அவர்களின் பிம்பத்தை கலைக்க உருவாக்கபட்டவை அன்றி வேறல்ல
வெள்ளையன் தான் செல்லுமிடமெல்லாம் தமிழனையும் சீக்கியனையும் அழைத்து சென்றான், இரண்டும் விசுவாசமாக கடும் உழைக்கும் இனமாக அவனுக்கு தெரிந்தது, ஆனால் தமிழன் இன்று மாறிவிட்டான் ஆனால் சீக்கிய இனம் பெரிதும் மாறவில்லை
காரணம் தமிழன் தன் மத அடையாளத்தை வரலாறை மறந்துவிட்டான். அவனுக்கு வந்த வழியும் தெரியாது செல்லும் வழியும் தெரியவில்லை, குருடனை போல் ஆகிவிட்டான்
ஆனால் சீக்கியன் தான் ஒரு பஞ்சாபி எனும் வகையில் தன் அடையாளத்தை தொடர்ந்து பேணுகின்றான், சில மாறுதல்கள் வந்தாலும் அவனின் வேர் பஞ்சாபில் இருக்கின்றது
கனடா முதல் மலேசியா என ஏகபட்ட நாடுகளில் பெரும் வாழ்வு வாழ்கின்றனர் சீக்கியர்கள் ஆனால் மதம் வேறு வாழும் நாடு வேறு என்பதில் வலுகவனம்
பிந்த்ரன் வாலே தனி காலிஸ்தான் கேட்ட காலங்களிலும் பொற்கோவில் சம்பவம் அதை தொடர்ந்த கலவரம் நடந்த கொடும் காலத்திலும் இந்தியாவோடு இருந்த சீக்கியரை மறக்கமுடியாது
இன்றும் இந்திய ராணுவத்தை தாங்குபவர்கள் அவர்களே
இந்த மாபெரும் புரட்சியினை செய்த குருநாணக்கின் கல்லறை பாகிஸ்தானின் கர்தர்பூரில் அமைந்துள்ளது, குருநாணாக்கின் 550ம் ஆண்டுவிழா நடப்பதால் இந்திய சீக்கியர் வருவதற்கு முட்டுகட்டை போட்டது பாகிஸ்தான்
பின் விலக்கி கொண்டு நேற்று பாஸ்போர்ட் இன்றி இந்திய சீக்கியர் வரலாம் என அறிவித்துவிட்டது, இது இந்திய சீக்கியருக்கு பெரும் மகிழ்ச்சி
எனினும் இந்திய ராணுவ உளவுதுறையும் இந்திய உளவுதுறையும் ஆட்களை அனுப்பும் என்பதால் கடும் மவுனமான விழிப்பில் இருக்கின்றது அது
செல்லும் பயணிகளோடு ஏதும் வில்லங்கத்தை அனுப்பி வைப்பார்கள் என சந்தேக கண்களோடு பார்க்கின்றது இந்தியா
எனினும் கர்தார்பூர் திருபயணிகள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு என சொல்லிவிட்டது பாகிஸ்தான்
குருநாணக்கின் ஆண்டுவிழா அமைதியாக நடக்கட்டும், சீக்கிய மக்கள் மகிழ்வாய் தங்கள் கடமையினை முடிக்கட்டும்
பாகிஸ்தான் மன்மோகன்சிங்குக்கு அழைப்பு விடுத்தது அவர் வருவதாக தெரியவில்லை என்றதும் ஆட்டத்தை மாற்றிற்று


இம்ரான்கான் தன் சமகால கிரிக்கெட் ஆட்டக்காரரான சித்துவுக்கு அழைப்பு விடுக்கின்றது, சித்து முன்பு பாகிஸ்தான் ஸ்பெஷலிஸ்ட் என அறியபட்டவர். ஆம் அதிரடி ஆட்டக்காரரான அவர் முன்பு பாகிஸ்தானுடன் ஆடும்பொழுது ஒரு ஆவி வந்து ஆடுவார் அது ரஞ்சித் சிங்கின் ஆவிபோலவே இருக்கும்
அந்த சித்து அரசியலுக்கு வந்தபின் தன் சித்துவிளையாட்டுக்களை காட்டினார், பாகிஸ்தான் அங்குள்ள சீக்கியர்களை நன்றாக கவனிக்கின்றது என சொல்லி முக ஸ்டாலின் வகையில் சேர்க்கபட்டார்
பின் ஆபத்தை உணர்ந்து தன்னை மாற்றினார்
ஆனால் விடுமா பாகிஸ்தான் அது வலிய அழைக்கின்றது, இனி ஜின்னா பிறந்தநாளுக்கு முக ஸ்டாலினை அழைப்பார்கள்
முக ஸ்டாலினும் ஜின்னா படமும் சிலையும் இந்தியாவில் இருந்தால் அதற்கு காவி அடித்திருப்பார்கள் நல்ல வேளையாக அவர் பாகிஸ்தானுக்கு வந்துவிட்டார் என பேசிவிட்டு வரமாட்டாரா என்ன?
ஆனால் ஜின்னா என்பதை சீனா என அவர் உச்சரித்துவிட கூடாது என்பதுதான் சோகம்..