குருபரர் நீதிநெறி விளக்கம் : 65
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 65
“பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம்
குலமகளே யேனையோர் செல்வம் – கலனழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார்
செல்வம் பயன்படுவ தில்”
பொதுநலம் மிக்கோரின் செல்வம் பொதுமகள் போல எல்லோரும் இன்புற்றிருக்க பயன்படும், சுயநலம் மிக்கோரின் செல்வம் குலமகளின் சேவை கணவனுக்கு என்பது போல அவனுக்கு மட்டும் பயன்படும், கஞ்சரின் செல்வம் விதவை போல யாருக்கும் பயன்படாமலே போகும் என்பது பாடலின் பொருள்
செல்வமானது நல்லோர் கையில் கிடைத்தால் எல்லோருக்கும் பயனாகும், சுயநலமிக்கோரின் கையில் கிடைத்தால் அவனுக்கு மட்டும் பயனாகும், கஞ்சதனமும் இழிகுணமும் நிறைந்தவன் கையில் சிக்கினால் யாருக்கும் அதனால் பலனில்லை என்பது குமரகுருபரர் சொல்லவரும் தத்துவம்