குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை
பேரரிவாளன் ஒன்றும் குற்றமற்றவர் அல்ல, யாழ்பாணம் சென்று புலிகளை சந்தித்தது, இந்திய அமைதிபடைக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உதவியது என ஏராளம், அன்றே இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சடிக்க புலிகளுக்கு உதவினார் அவர்
தனுவின் பெல்ட்டில் இருந்த பேட்டரி மட்டுமல்ல, சிவராசனுக்கு வயர்லெஸ் தொடர்பிற்காக சக்திவாய்ந்த கார் பேட்டரி வாங்கி கொடுத்தது, கவசாகி பைக் வாங்கி கொடுத்தது என ஏராள குற்றம் உண்டு
அதாவது இவர் ஒரு புலி, 100% விடுதலை புலி, அதில் சந்தேகமே இல்லை
ராஜிவ் கொலையில் செத்துபோன ஹரிபாபு , ஈழபுலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்பதும், அவர் ராஜிவ் கொலைக்கு பின் ஈழத்தில் குடியேற இருந்ததும் அவரின் காதலி எழுதிய கடிதத்தில் தெரிகின்றது
அவரின் பங்களிப்பு போன்றதுதான் பேரரிவாளனின் பங்களிப்பும், குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை
இன்னும் ஒரு இடத்திலும் புலிகளை அவர் கண்டித்ததுமில்லை, அந்த சாகச நாடககாரி அற்புதம்மாளும் ஒரு இடத்திலும் புலிகளால் என் மகன் வாழ்வு நாசமாயிற்று என சொல்லவுமில்லை
அற்புதம்மாள் சாவித்திரியினை விட மிக சிறந்த நடிகை, அவரின் தேர்ந்த நாடக காட்சிகளை பாருங்கள் என் மகன் குற்றமற்றவன் என சொல்வாரே தவிர ஒரு இடத்திலும் என் மகன் குற்றமற்றவன் என புலி பிரபாகரன் சொல்லவேண்டும் என்றோ, புலிகள் என் மகனுக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என சொல்ல வேண்டும் என்றோ சொல்லவே மாட்டார்
ஆம் இதுவரை சொன்னதில்லை சொல்லவும் மாட்டார்
நோயுற்ற கணவன் மகனோ சிறையில், ஆனால் டெல்லிவரை அவரால் வழக்கு நடத்தமுடிகின்றது மகள் திருமணம் பேத்தி திருமணம் வரை பிரமாண்டமாக நடத்தமுடிகின்றது என்றால் எப்படி?
ராஜிவ் கொலையில் சிக்கி தன் மகளை லண்டனில் டாக்டராக்கிய நளினியும், பேரரிவாளன் என்பவனின் தாயும் பெற வேண்டியதை கனிசமாக பெற்றுவிட்டார்கள் பெற்று கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் நிஜம்