குளோப் தியேட்டர் அலங்கார் தியேட்டரான வரலாறு
இந்த விஷயத்துக்கு நம்மிடம் ஆதாரமில்லை, சர்காரியா கமிஷனின் முழு அறிக்கையினை நாம் படிக்கவில்லை
இது இப்பொழுது பரபரப்பாக கசியும் செய்தி, மூல பத்திரம், மிசாவில் டூப் போட்டது போல ஒரு நெருக்கடியினை அது கொடுக்கலாம்
விஷயம் இதுதான்
ஆம் சென்னையின் புராதான தியேட்டரில் ஒன்றான குளோப் தியேட்டர் அலங்கார் தியேட்டரான வரலாறு அது
அந்த வரலாற்றில் கருணாநிதி, முரசொலிமாறன் மற்றும் சர்காரியா என பலரின் பெயரும் இப்பொழுது அடிபடுகின்றது.
கருணாநிதியும் முரசொலிமாறனும் குளோப் தியேட்டர் விவகாரத்தில் எவ்வளவு ஆடி அநியாயமாக இன்னொருவருக்கு அதை பட்டாபோட்டு கொடுத்திருக்கின்றார்கள் எனும் விஷயம் கசிகின்றது
அது சர்காரியா கமிஷன் அறிக்கையில் சொல்லபட்டு இருக்கின்றது என்கின்றார்கள்
குளோப் தியேட்டர் பின் அலங்கார் தியேட்டராகி இன்று ஷாப்பிங் மால் ஆகிவிட்டது, என்றாலும் அதை கட்டியவன் யார், லீசுக்கு எடுத்தவன் யார் என்பது வரலாற்றில் கிடக்கின்றது
குத்தகைக்கு எடுத்தவனுக்கே கட்டடம் சொந்தம் என கருணாநிதி செய்த சட்டதிருத்ததிலே தியேட்டர் அதற்கு சொந்தமானவன் கைவிட்டு குத்தகைகாரனுக்கு போய் இருக்கின்றது
இந்த சட்டதிருத்தத்தால் கருணாநிதி ஆதாயம் அடைந்தார் என சர்காரியா சொன்னதாக அவரின் அறிக்கையில் இருக்கின்றது என்கின்றார்கள் சிலர்
இதற்கெல்லாம் நம்மிடம் ஆதாரமில்லை எனினும் சுற்றிகொண்டிருக்கும் செய்தியினை சொன்னோம், அவ்வளவுதான்
ஆக முரசொலி மாறனின் சன்டிவி குளோப் இனி சுற்றும்பொழுது உங்களுக்கு குளோப் தியேட்டர் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல