குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றார் கமல் …

Image may contain: 1 person, glasses and text

கமலஹாசனின் பேட்டி இப்பொழுதான் பார்த்தேன், மனிதர் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கின்றார், சில பதில்கள் உண்மையிலே உளறல்

நான் கருப்புசட்டைக்காரன் என்கின்றார், ஆனால் இந்தியில் பிக்பாஸ் வந்தபொழுது ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை இந்தி தெரியாதோ என ஒரு மாதிரி குத்துகின்றார், கருப்புசட்டைகாரனுக்கு ஏன் இந்தி?

இல்லை இவர் என்ன ஹாலிவுட், பாலிவுட் நடிகரா? தமிழ் நடிகர் அல்லவா?

சேரி பிஹேவியர் எனும் வார்த்தையினை விட மோசமான வார்த்தைகள் இந்த சமூகத்தில் பேசபடுகின்றது என்கின்றார், அது யாருக்கு தெரியாது?

உடலறவு கூடத்தான் சமூகத்தில் நடைபெறும், அதற்காக அதனை கேமரா முன்னால் காட்ட முடியுமா?

பொது இடத்தில் எதனை பேசவேண்டும் , எதனை பேசகூடாது என்ற வரைமுறை இருப்பது கூட இவருக்கு தெரியவில்லையா?

பொது இடத்தில் சாதிவன்மம் கூடாது என சட்டமே இருக்கும் பொழுது இவர் இப்படி சொல்வது நிச்சயம் கண்டிக்கதக்கது

அன்றே முத்தகாட்சியில் நடித்தவன் நான் , ஏன் அன்றே கைதுசெய்யவில்லை என பொங்குகின்றார், அன்று விட்டது மக்களின் தவறு என்பது போல் இருக்கின்றது

என்னவெல்லாமோ சொல்கின்றார், நாகேஷின் எதிர்நீச்சல் படம் போன்றதுதான் பிக்பாஸ் என்கின்றார்,

ஆக ஆளாளுக்கு இப்படி பிக்பாஸ் நடத்தினால் என்னாகும்? தமிழகத்தில் இல்லா சாதியா? கோஷ்டி தகரறாறா?

அப்படி நடத்தினால் தமிழகம் தாங்குமா என பத்திரிகையாளரும் கேட்கவில்லை

கமலஹாசன் மிகபெரும் அடையாளம், அவரை இச்சமூகம் நிச்சயம் கவனிக்கும், அவரிடம் கொஞ்சம் சமூக பொறுப்பினை எதிர்பார்பது தவறல்ல

எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, நான் என்ன வசனமா எழுதினேன் என்றெல்லாம் குதிக்கின்றார், சரி ஒருவேளை நாளை ஒரு ஷகீலா படத்தில் கமலஹாசன் ஒரு காட்சியில் வருவாரா?

இது ஷகீலாவும் நடிகை, நானும் நடிகன் அவ்வளவுதான் என சொல்வாரா? இல்லை சன்னி லியோனுடன் அம்மாதிரி படத்தில் நடிப்பாரா?

அதில் எல்லாம் நடிக்கமாட்டார் அல்லவா? ஏன் இமேஜ் பாதிக்கும் இப்படி எல்லாமா என முகம் சுளிப்பார்கள் இன்னும் ஏராளம்

அப்படி இந்த பிக்பாஸும் சில சர்ச்சைகளை செய்யும்பொழுது, சில ஜாதிவெறி பரப்பும்பொழுது கமலஹாசன் அதற்கு வக்கலாத்து வாங்குவது ஏன்?

தமிழ்மொழிதாய் வாழ்த்து என சொன்னால், ஜனகணமன பெங்காலி மொழி, தமிழ் தெரியாதவற்கெல்லாம் தமிழ் சொல்லிகொடுக்கின்றோம் என்றேலாம் பேசுகின்றார்

ஒரு சிலை செய்யபடும்பொழுது கூட மூடி வைத்து செய்யும் தமிழகம் இது, அதாவது அரைகுறைகள் வெளிதெரியாமல் அது முழுமை பெற்றபின் உலகிற்கு சொல்வார்கள்

ஏன் இவரே முழுமேக்கப் முடிந்தபின்புதானே கேமரா முன் வருவார், அரைகுறை மேக்கபில் வந்தால் அசிங்கமாயிருக்காதா?

அப்படி இவர்களுக்கு தமிழ் சொல்லிகொடுப்பது யாருமற்ற இடத்தில், ஏன் கமலஹாசனின் பூட்டிய வீட்டிற்குள் சொல்லிகொடுத்தால் யாருக்கென்ன?

ஆனால் பொது இடத்தில் இப்படி எல்லாம் தமிழ்கொலை செய்வோம் என பகிரங்கமாக சொன்னால் எப்படி?

மனிதர் பதற்றத்தின் உச்சத்தில் இருக்கின்றாரா? இல்லை கொஞ்சம் கொஞ்சம் தன் இனத்துபக்கம் சாய்கின்றாரா? என்பது தெரியவில்லை

ஜிஎஸ்டி குறைத்ததற்கு நன்றியாக இருப்பேன் என அவர் சொல்வது வேறு திகிலை உண்டு பண்ணுகின்றது, அதனால்தான் இப்படி எல்லாம் நன்றிகடன் காட்டுகின்றாரோ?

சைவ உணவினை பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார், சைவம் என்பது மதமாம் இன்னும் ஏராளம், இது யாருக்கு தெரியாது. அது கடன்வாங்க பட்டதாம்

அப்பட்டமான உளறல், இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது, அதன் ஒரு பிரிவு சைவம் அதில் தாவர உணவு மட்டுமே , புத்தமும் சமணமும் அதனைத்தான் பின்பற்றின‌

இந்துமதத்திலிருந்தே புத்தம் அதனை களவாடியதே தவிர, புத்தத்திலிருந்து இந்துமதம் சைவத்தை களவாடவில்லை

சைவம் உண்டால் சாந்தம் வருமாம், அன்னார் சொல்கின்றார்

ஹிட்லரும் சைவம் தான், காந்தியினை கொன்ற கோட்சேவும் சைவம் தான் என்பது இவருக்கு தெரியாதா?

கலைஞனுக்கு சமூக பொறுப்பு வேண்டும், டாஸ்மாக் விளம்பரத்திலோ, அல்லது புகை பழக்க விளம்பரத்திலோ, சன்னிலியோன் விளம்பரத்திலோ அவர் வந்தால் எப்படி கண்டிபபர்களோ அப்படித்தான் சமூக ஜாதி இம்சைகளுக்கும், சில அட்டகாசங்களுக்கும் அவர் கண்டும் காணாமல் பங்கெடுப்பதை கண்டிக்கின்றார்கள்

இதற்கு ஏன் இப்படி பொங்குகின்றார் கமல், காசு கொடுத்தால் நடிப்பாராம்

ஏன் காசுக்காக எந்த வேடமென்றாலும் நடிப்பீர்களா கமலஹாசன்

அவர் விதிவிலக்கான அறிவாளி , நாமெல்லாம் சரசரி. பொதுவாக பெரும் அறிவாளிகளுக்கும் சராசரிக்கும் பொருந்தாது

ஆனால் அந்த அறிவாளிகள் நல்வழி காட்டவேண்டும் இல்லாவிட்டால் அந்த அறிவால் ஒரு பயனும் இல்லை

பசுமாட்டிடம் பால் கட்டினால் மக்களுக்கு பயன், நாய்க்கும் பன்றிக்கும் பால் கட்டி யாருக்கு பயன்?

சீனா வரிந்து கட்டுகின்றது, தமிழகம் சடுகாடாகின்றது, இன்னும் ஏராள பிரச்சினை நடக்கும் நாட்டில் பிக்பாஸ்தான் பிரச்சினையா என அவர் கேட்டிருந்தால் கூட அவரின் சமூக பொறுப்பினை பாராட்டலாம்,

இதே கமிஷனர் அலுவலகம் குட்கா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய செய்தி வந்ததே, அதனை கண்டித்து மனு கொடுக்காமல் என்னை கண்டித்து ஏன் மனுகொடுக்க வேண்டும் என கேட்டிருந்தால் கூட கைதட்டலாம்

அன்னார் அப்படி ம்ஹூம்

கமலஹாசன் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உண்டு, அவரால் முடியும், அதற்காக பிக்பாஸில் பணம் வாங்கிவிட்டேன் அங்கு நடக்கும் எல்லா அட்டகாசத்திற்கும் வக்கலாத்து வாங்குவேன் என சொல்வாரானால் அது நிச்சயம் சரி அல்ல‌