குஷ்பூவிற்காக மட்டுமே வெற்றிபெற்ற படம் ‘மன்னன்’
டிவியில் மன்னன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, அப்படம் குஷ்பூவிற்காக மட்டுமே வெற்றிபெற்ற படம் என்பது உலகிற்க்கே தெரிந்தது
பண்டரிபாய் முன்னால் ரஜினியினை விட்டுகொடுக்கும் காட்சியில் அப்படி ஒரு தியாக நடிப்பினை குஷ்பூ கொடுத்திருந்தார், அதற்காகவே பத்ம பூஷன் விருது அவருக்கு கொடுக்கபட்டிருக்க வேண்டும், இந்த இந்தியாவில் எல்லாமே அரசியல், நாசமாய் போன அரசியல்.
ஆனானபட்ட சிவாஜி கணேசனுக்கே பிரான்சும், எகிப்தும்தான் முதலில் விருதுகள் வழங்கின, அப்படி விரைவில் பிரான்சின் செவாலியே விருது குஷ்பூவிற்கு கிடைக்கலாம்
அதற்கு முன்பே குஷ்பூவால் திருவிழா கோலம் பூண்டிருக்கும் இத்தாலியில் அவருக்கு “ஆர்டர் ஆப் மெரிட்” விருது வழங்கபட வாய்பிருக்கின்றது
மன்னன் படத்தில் ஒரு காட்சியில் கண்களில் புன்னகை பூக்க அவர் ஒரு சிரிப்பு சிரிக்கும் பொழுது, அண்ட சராசரமும் ஒரு நிமிடம் நின்றுதான் போகின்றது…
What a Girl………