“குஷ்பூ டே” கொண்டாட்டம்
“குஷ்பூ டே” கொண்டாட்டம் உலகெல்லாம் களை கட்டியாயிற்று, டிவிக்களில் குஷ்பூ படமாக ஓளிபரப்புகின்றார்கள்.
நாமும் நவநாட்கள் குஷ்பூ படம் பார்ப்பது என்பது சங்கத்தால் எடுக்கபட்ட முடிவு
அப்படியாக இன்று சிங்கார வேலன் படம். குஷ்பூவின் கம்பீர அழகு கொட்டி கிடக்கும் படம். படத்தில் ஒரே இம்சை இந்த கமல்ஹாசன் என்பவர் ஒரு பாத்திரத்தில் வந்து அவரை காதலிப்பதாக சுற்றிகொண்டே இருப்பார்.
அந்த காட்சிகளை மட்டும் எறும்பு கடிப்பதை போல பொறுத்துகொண்டால் , அது ஒரு அற்புதமான குஷ்பூ காவியம்.
10 மணிநேர ஆழ்நிலை தியானம், தொடர்ச்சியான பிரார்த்தனைகள், ஜென் தத்துவ வகுப்புகள், உலகெல்லாம் சுற்றி பார்த்த அழகு காட்சிகள் எல்லாம் தரமுடியாத மன நிறைவினை, ஒரு குஷ்பூ படம் தந்துவிடும்.
அதுதான் குஷ்பூவின் தனித்துவம்.
தமிழர் விளையாட்டான கபடிக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் முதலில் சன்டிவியில் வரும் அந்த “நட்சத்திர கபடி” எனும் கொடுமையினை நிறுத்தவேண்டும்
பூனை நடை நடந்து செல்வதெல்லாம் கபடி என சொனால் எப்படி ஏற்றுகொள்வது.
அதனை பொறுப்பதே பெரும் விஷயம், இதில் அடிக்கடி அதில் வரும் சண்டையினைத்தான் கொஞ்சமும் பொறுக்க முடியவில்லை.