கூடன்குளம் அணுவுலை கழிவுகள்

அணுகழிவுகளை கூடங்குளத்தில் புதைப்பது என்பது பெரும் சர்ச்சையாக ஓடிகொண்டிருக்கின்றது

இந்தியாவில் மொத்தம் 22 அணுவுலைகள் 7 இடங்களில் இயங்குகின்றது, தமிழகம் தவிர்த்து இன்னும் 5 இடங்கள் உண்டு

இப்பொழுது சிக்கல் கூடன்குள அணுவுலை கழிவுகள் கூடன்குளம் வளாகத்திலே புதைக்கபடும் என்பதில் வெடிக்கின்றது

நிச்சயம் கூடன்குளம் அணுவுலை 7ம் அணுவுலை, அதற்கு முன்பே 6 உலைகள் இயங்கதொடங்கியாயிற்று

அவற்றிலும் கழிவுகள் 1980களில் இருந்தே உண்டு, அவை எல்லாம் எங்கு புதைக்கபட்டன என்றால் அங்கேதான்

கல்பாக்கம் மட்டும் தன் அணுவுலை கழிவுகளை மறுசுழற்சிசெய்யும் வகையில் சில நவீன மாடல்களை பெற்றிருக்கின்றது என்கின்றார்கள்

கூடன்குளம் அணுவுலை சில ஆண்டுகளாக இயங்க தொடங்கிய பின் இந்த சிக்கல் எப்படி வெடிக்கின்றது என்பதுதான் தெரியவில்லை

நாட்டின் மொத்த அணுகழிவுகளையும் இங்கே புதைக்கின்றார்கள் என ஒருகோஷ்டி கிளம்புகின்றது

அப்படிஅல்ல கூடன்குள அணுவுலை கழிவுகள் மட்டுமேதான் அங்கு புதைக்கபடும் என்கின்றது ஒரு கோஷ்டி

அப்படியானால் இவ்வளவு நாள் கூடங்குளத்து கழிவு எங்கே என்றால் அங்கேதான் என்கின்றார்கள், பின் ஏன் பரபரப்பு என்றால் சத்தமே இல்லை

ஆளாளுக்கு குழம்பி குழபுகின்றார்கள்

மாநில அரசுக்கு இதைவிடமுக்கியமான ஒற்றை தலமை கட்சி உட்பட ஏக சிக்கல் இருப்பதால் கட்சியின் அணுஆலையே அவர்களுக்கு பிரதானம்

எதிர்கட்சி தலைவருக்கு அணு சிக்கலை விளக்கி சொன்னால் அவர்திருப்பிகேட்டு நம்மை குழப்பிவிடுவார்

“நியூக்ளியர்..” என சொல்ல சொன்னால் “நிக்கி கல்ராணி..” என திருப்பிசொல்வார் அவர்

வேறு மாநிலத்துக்கு நாதி யார்?

ஒருவருமில்லை சைமன் கோஷ்டி சும்மா, உதயகுமார் கோஷ்டி ஓவர் பில்டப்

அவர்களிடம் பேசினால் இன்றே வேறுகிரகத்துக்கு ஓடிவிடலாம் அளவு பயமுறுத்தி கடைசியில் பிரபாகரனில் வந்து நிற்பார்கள்..

ஆக ஒன்றும் சரியில்லை, மத்திய அரசாவது இதுபற்றி விளக்கவேண்டும், ஆனால் அவர்கள் சத்தமே இல்லை

என்ன அணுகொள்கை என அவர்களும் சொல்லவில்லை

நாங்கள் பாராளுமன்றம் சென்றால்.. என முழங்கிய தமிழக புது எம்பிக்களும் சத்தமில்லை, எழும்புங்கள் இதுபற்றி கேளுங்கள் என்றால் திராவிடம், சமூக நீதி, பெரியார் என சொல்லிவிட்டு தூங்கிவிடுகின்றார்கள்

இதுபற்றி தமிழகம் ஒன்றை சொல்ல, ஊடகம் ஒன்றை சொல்ல, திடீர் குபீர் அணு விஞ்ஞானிகள் ஒன்றை சொல்ல ஒரே குழப்பம்

மத்திய அரசு நிலைப்பாட்டை விளக்க வேண்டும்

மற்றபடி தென் தமிழகத்தின் தெற்கு தொங்கலில் புரட்சி வெடிக்க வாய்பில்லை

நன்றாக கவனித்திருக்கின்றேன் KKNPP என்பது இவ்வளவு காலம் சும்மா அல்ல‌

ஏகபட்ட பணத்தினை வளர்ச்சி பணி என அள்ளிவிட்டிருக்கின்றது, சாலைமுதல் கட்டடம் வரை இறைத்திருகின்றது

அதில் பலன் பெற்றோர் பணம் பெற்றோர் ஏராளம் ஏராளம்

மிக வசமாய் வளைத்துவிட்டது தெரிகின்றது, ஒப்புக்கு ஏதோ கருத்து அது என கேட்பார்கள்

முடிவு எடுத்துவிட்டு ஏதோ கண்துடைப்பு செய்கின்றார்கள்

மற்றபடி ஆகபோவது ஒன்றுமில்லை, எதிர்ப்பே வராதவாறு எல்லா பக்கமும் அணைகட்டியாயிற்று

கூடங்குள அணுவுலை ஆபத்துதான் அதே நேரம் அந்த ஆபத்து நாட்டின் 7 இடங்களுக்கு இருக்கின்றது, அதில் தலைநகரமும் இருக்கின்றது , மோடியின் குஜராத்தும் இருக்கின்றது என்பதுதான் நிஜம்