கூமுட்டை சிந்தனை
ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது
அதாவது USA , United states of America என்பதுபோல் இந்தியாவினை United States of India என அழைக்க வேண்டுமாம், இதெல்லாம் எவ்வகை கூமுட்டை சிந்தனை என்பதுதான் தெரியவில்லை
சீனா பரந்துவிரிந்த தேசம் , ரஷ்யாவும் அப்படியே இரு நாட்டிலும் ஏகபட்ட இனங்களும் மொழியும் உண்டு. அப்படி USC, USR என்றா அழைக்கின்றார்கள்?
பல பெரிய நாடுகளில் பல இனம் பல மொழி பேசும் இனங்கள் உண்டு அவை எல்லாம் மொத்தமாக நாட்டின் பெயரிலேதான் அழைக்கபடும்
கன்டாவினை அப்படி சொல்வார்களா? இல்லை ஆஸ்திரேயாவினை சொல்வார்களா?
நிச்சயம் இல்லை
அமெரிக்க வரலாறு வித்தியாசமானது , லிங்கன் காலத்தில் உள்நாட்டு போர் தீவிரமாக இருந்தது. அதை பல துண்டுகளாக உடைத்து போடுவதில் அந்நாளைய தாதா பிரிட்டனுக்கும் ஆர்வம் இருந்தது
கடும் உள்நாட்டு போரில் அந்நாடு உடைய இருந்த நேரத்தில் சில ஒப்பந்தம் மூலம் அது முடிந்து என ஒரு மாதிரி USA பெயரிட்டு என்னவோ அமைதியானார்கள்
USA என்ற பெயர் வந்தது அப்படித்தான்
மாகாணங்கள் தனிநாடாக உடைய இருந்த நேரம் ஐக்கிய மாகாணம் (United States)என பெயரிட்டு கொண்டார்கள்
ஐக்கிய ராஜ்ஜியம் (united Kingdom) என இங்கிலாந்து ஸ்காட்லாண்டு அயர்லாந்து என மூன்று ராஜ்யங்களை கொண்டிருந்த பிரிட்டனுக்கு போட்டியாக இது ஐக்கிய மகாணம் என சொல்லிகொண்டார்கள்
அவர்கள் நிலையும் உலகளாவிய நிலைப்பாட்டு அவசியமும் அப்படி இருந்தது
இந்தியாவும் அப்படி அழைக்கபட வேண்டுமென்றால் முதலில் இவர்கள் துப்பாக்கி தூக்கட்டும், பெரும் போரில் இறங்கட்டும்
அதன்பின் அமெரிக்க பாணியில் என மாற்றலாம்
செய்வார்களா? நிச்சயம் மாட்டார்கள்
வெளிநாட்டு பாணியில் அவர்கள் எடுத்த சவாலை அவர்கள் பட்ட சிரமத்தை அழிவினை எல்லாம் செய்ய தயார் இல்லை ஆனால் பெயரை மட்டும் சூட்டிகொள்ள வேண்டும்
வெள்ளையனின் மவுண்ட் ரோட்டை அண்ணாசாலை என்றும் அவனின் ரயில் நிலையத்தை ராமசந்திரன் நிலையம் எனவும் மிக எளிதாக மாற்றி அடையாளமிட்ட கூட்டம் இந்நாட்டையும் அப்படி மாற்றிவிட திரிகின்றது
ஒருவேளை இந்தியா United States of India என மாறும்பொழுது தமிழகம் எப்படி மாறவேண்டும் தெரியுமா
UTDஅதாவது United Tamilnad District என மாறவேண்டும் புரிகின்றதா? அதன் பின் United Taluk , United Panchayat கேட்பார்களா என்பதெல்லாம் அவரவர் வசதி