கெத்தாக திரிகின்றார் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன, எப்படியாவது அவரை விரட்டவேண்டும் என ஏராளமான புகார்கள்
அப்படி ஒரு பெண்ணும் சொல்லிவிட்டார், “டிரம்ப் என்னை கையினை பிடித்து இழுத்தார்”
அதாவது முன்பொரு காலத்தில் டிரம்ப் அந்த அம்மணியிடம் தன் விருப்பத்தை சொன்னாராம், அதனை இப்பொழுது சொல்கின்றார் அந்த புருக் ஷீல்ட்
டிரம்ப் கிளிண்டன் பட்டபாட்டினை அறிந்திருக்கின்றார், அதனால் பொய் சொல்லவில்லை மாறாக கூடுதலாக தமிழ் சினிமா பார்ப்பாரோ என்னவோ வடிவேலு ஸ்டைலில் போட்டு தாக்கிவிட்டார்
“ஒரு இளைஞன் ஒரு இளைஞியை கையை பிடிச்சி இழுக்கத்தான் செய்வான், ஏண்ணா அது வாலிப வய்யசு” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
பதிலுக்கு ஒரு குரலும் அமெரிக்காவில் ஒலிக்கவில்லை. கெத்தாக திரிகின்றார் டிரம்ப்.