கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி

நேருவும், இந்திராவும் இன்னும் பல தேசிய கட்சி பிரமுகர்கள் அச்சத்தோடு வந்து அவமானபட்டு சென்ற தமிழகத்தில் , செய்யவேண்டியதை செய்துவிட்டு மிக கெத்தாக வந்து போயிருக்கின்றார் மோடி

இந்த காட்சி தமிழகத்திற்கு புதிது, நிச்சயம் புதிது

நேரு கருப்புகொடி காட்டி விரட்டபட்டார், இன்னும் பலர் தாக்கபட்டனர்

இந்திராவே ரத்தகாயத்தோடுதான் தப்பினார்

தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பேன் என கிளம்பிய ராஜிவ் தமிழக மண்ணிலே கொல்லபட்டார்.

அதன் பின் எந்த பிரதமர் வந்தாலும் தமிழக முதல்வர்கள்தான் முன்னிறுத்தபடுவர், பாரத பிரதமர் அயல்நாட்டு தலைவர் போல் காண்பிக்கபடுவார்.

இங்குள்ள யதார்த்தம் அப்படித்தான் இருந்தது

அதில் கலைஞரும் ஜெயாவும் மகா வித்தகர்கள்.

கிட்டதட்ட 60 வருடங்களுக்கு பின் இந்திய பிரதமர் அவருக்கே உண்டான தனித்துவத்துடன் தமிழகம் வந்திருக்கின்றார்

கலைஞர் அமைதி, நடராஜனும் அமைதி

அதனால் திராவிட எதிர்ப்புமில்லை, நடராஜனுக்கு விசுவாசமான படையினரின் குரலுமில்லை

60 ஆண்டுகளாக இங்கு டெல்லிக்கு எதிராக‌ இருந்த ஒரு நெருப்பு அணைந்துவிட்டதை உணரமுடிகின்றது

கலைஞரை மோடி அமைதியாக சந்தித்துவிட்டு புன்னகைத்தபடி சென்றிருப்பது எப்படிபட்ட விஷயம், அதன் அர்த்தம் என்ன என்பதுவரலாறு படித்தோருக்கு தெரியும்.