கேரள முதல்வர் சிறந்த கம்யூனிஸ்ட் : அமெரிக்க பத்திரிகை புகழாரம்

கேரள முதல்வர் சிறந்த கம்யூனிஸ்ட் அமெரிக்க பத்திரிகை புகழாரம் : தோழர்கள் சிலிர்ப்பு

கம்யூனிஸ்டுகளை என்று அமெரிக்கா பாராட்டியது?

காலடியில் இருந்த கியூப கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோவினை 500 முறை கொல்லமுயன்றது, சேகுவாராவினை கொன்றே போட்டது.

ஆப்கனில் சோவியத் நிறுவமுயன்ற கம்யூனிசத்தை பின்லேடன் மூலம் ஒழித்தது, ஈழத்து பத்மநாபாவினை புலிகள் மூலம் சாய்த்தது.

என்று கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு விருப்பமானவர்களாக இருந்தார்கள்?

உலகில் எத்தனையோ கம்யூனிஸ்டுகள் இருந்தும் எல்லோர் மேலும் வெறுப்பை கொட்டிய அமெரிக்க பத்திரிகைகள் இந்த பிரணாய் விஜயனை மட்டும் பாராட்டுவது ஏன்?

அதே தான், இந்தியாவில் குழப்பம் விளைவிக்க யாரையாவது ஆதரிக்க வேண்டும் என்பது அவர்கள் கொள்கை, யாரெல்லாம் டெல்லியோடு மல்லுகட்டுகின்றார்களோ அவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்கு பிடித்தமானவர்கள்

அது கம்யூனிஸ்டாக இருந்தாலும் சரி, ஐ.எஸ் ஆதரவாளர், வடகொரிய ஆதரவாளரானும் சரி

அப்படி கம்யூனிஸ்டுகள் என்றால் வெறுப்பை கொட்டும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு கம்யூனிஸ்ட் விஜயனை பிடித்திருக்கின்றது