கேரள முதல்வர் பினராயி விஜயனை வம்புக்கு இழுக்கும் ஆர் எஸ் எஸ் …
கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலையை துண்டிப்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் : மத்தியப் பிரதேச ஆர்எஸ்எஸ் நிர்வாகி
தமிழகம், கேரளம் என வரிசையாக வம்பு இழுக்கின்றது ஆர் எஸ் எஸ் கும்பல்
ஓண திருவிழாவினை வாமண ஜெயந்தி என அறிவித்து அமித்ஷா மலையாளிகளிடம் வாங்கிகட்டிகொண்டது குறிப்பிடதக்கது
முன்பு கலைஞரின் நாக்கினை வெட்டுவேன் என வடக்கே ஒரு சாமியார் குதித்ததை போலவே, இப்பொழுது ஒரு முதல்வரின் தலையினை வெட்டுவேன் என ஒருவர் கிளம்பியிருக்கின்றார்
ஆக மலையாளி, தமிழன் என எல்லோரையும் திராவிட ஒற்றுமையில் கிளம்பசெய்யும் திருப்பணியினை ஆர் எஸ் எஸ் செய்கின்றது
இவர்களா பெரியாரை விரட்டிவிடுவார்கள்?
தங்களை அறியாமல் பெரியாரை இந்த தலைமுறைக்கு நினைவுபடுத்திகொண்டே, அவரின் தேவையினை உணரசெயது கொண்டிருக்கின்றார்கள்
அவ்வகையில் தேங்க் யூ ஆர்.எஸ்.எஸ் தேங்க் யூ என சொல்லிகொண்டே இந்த தென்னாடு பெரியாரை தூசுதட்டிகொண்டிருக்கின்றது
இந்த ஆர்.எஸ்.எஸ் பதர்கள்தான் பெரியாரை தமிழகத்தை விட்டு விரட்டபோகின்றதாம், முடியுமா?
இருந்து பாருங்கள், மறுபடி பெரியாரை உயிர்த்தெழவைக்காமல் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஓயப்போவதில்லை